ஊரடங்கு 5.0 தளர்வுகள்.. மக்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

ஊரடங்கு 5.0 தளர்வுகள்.. மக்களின் சந்தேகங்களும் அதற்கான பதில்களும்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் ஜூன் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தளர்வுகள் குறித்து எழும் சந்தேகங்களை புதிய தலைமுறையின் சமூக வலைத்தள பக்கங்களில் நீங்கள் பதிவு செய்தால் நாங்கள் பதிலளிக்கிறோம் என தெரிவித்திருந்தோம். அந்த வகையில் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகயில் மக்கள் கேட்டக் கேள்விகளும், அதற்கு புதியதலைமுறை அளித்த பதில்களும் உங்கள் பார்வைக்கு....
(#AskPT என்ற ஹேஷ்டேக்கிலும் பதில்களை காண முடியும்.)
1.கேள்வி: நான் தமிழகத்தைச் சேர்ந்தவன். இப்போது வெளிமாநிலத்தில் இருக்கிறேன். வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு தற்போது வர இ-பாஸ் அவசியமா..?
பதில்: வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வர இ-பாஸ் நிச்சயம் அவசியம். இ-பாஸ் இல்லாமல் உங்களால் பயணம் மேற்கொள்ள முடியாது. 2. இ-பாஸ் அப்ளை செய்வது எப்படி ?
இ-பாஸ்க்கு அப்ளை செய்யும்போது சொந்த வாகனத்தில் பயணிக்கப் போகிறோமா அல்லது அரசுப் போக்குவரத்தை பயன்படுத்தப் போகிறோமா உள்ளிட்ட விஷயங்களை கவனித்தில் கொள்ள வேண்டும். சொந்த வாகனத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், தமிழகத்தில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்லவும் https://tnepass.tnega.org/#/user/pass என்ற இணையப் பக்கத்தில் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம் நீங்கள் இருக்கிற மாவட்டமும், செல்லப்போகிற மாவட்டமும் ஒரு மண்டலத்திற்குள் இருந்தால் இ-பாஸ் அவசியமில்லை.
எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த மண்டலங்களுக்குள் வருகிறது என்ற விவரங்கள் பின்வருமாறு: மண்டலங்கள்:
1 - கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம், நாமக்கல்
2 - தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி
3 - விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி
4 - நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை
5 - திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மண்டலம்
6 - தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி, தென்காசி,
7 - காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு 8 - சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி.
மண்டலங்களுக்குள் செல்ல மட்டுமே இ பாஸ் தேவையில்லை. உதாரணத்திற்கு இப்போது மண்டலம் 1-ல் இருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து அதே மண்டலத்தில் இருக்கும் திருப்பூர் மாவட்டத்திற்கு சொந்த வாகனத்தில் செல்ல இ-பாஸ் அவசியமில்லை.
அதேசமயம் மண்டலம் 1-ல் இருக்கும் கோயம்புத்தூரில் இருந்து மண்டலம் 3-ல் இருக்கும் விழுப்புரத்திற்கு செல்ல இ-பாஸ் அவசியம். ஒரே மண்டலங்களுக்கு கீழ் வரும் மாவட்டங்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை. மண்லடங்களுக்கு இடையேயான பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடர்கிறது. இதனால் பேருந்து சேவையை உங்களால் பயன்படுத்த இயலாது. நீங்கள் செல்லப்போகும் வாகனத்திற்கு இ-பாஸ் பெற்றுக் கொண்டே செல்ல முடியும்.
3.கேள்வி: ஊரடங்கால் தமிழகம் திரும்ப முடியாமல் தவிப்போர் எப்படி இ-பாஸ் அப்ளை செய்வது?
பதில்:
தமிழகத்தைச் சேர்ந்த நீங்கள் ஊரடங்கால் வெளிமாநிலங்களில் சிக்கிக் கொண்டுள்ளீர்கள் என்றால் அரசுப் போக்குவரத்தை பயன்படுத்தி தமிழகம் திரும்ப முடியும். ஆனால் அதற்கு இ-பாஸ் நிச்சயம் அவசியம். https://rttn.nonresidenttamil.org என்ற இந்த முகவரியில் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம். 4. கேள்வி : தமிழ்நாட்டைச் சொந்த மாநிலமாகக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வெளிமாநிலத்தில் இருந்து ஜூன் 1 முதல் ரயில் மூலம் தமிழ்நாட்டிற்குள் வருவதற்கு என்ன விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்? இ-பாஸ் யாரிடம் பெறவேண்டும்?
தற்போது இருக்கும் மாநிலத்திலா அல்லது தமிழ்நாட்டிலா?
பதில் :
தற்போது உள்ள மாநிலத்தில் பதிவு செய்தால் போதுமானது.
5. கேள்வி : சென்னையில் சலூன் கடைகள் திறக்குமா? ஆட்டோக்கள் ஓடுமா?
பதில்:
சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் சலூன் கடைகளை ஜூன் 1 முதல் திறக்கலாம். அதேசமயம் குளிர்சாதன வசதிகளை பயன்படுத்தாமல் அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு இயங்க வேண்டும். ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு நபர்கள் பயணிக்கலாம். ரிக்ஷாக்களுக்கு அனுமதி உண்டு. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று நபர்களுடன் இயங்கலாம். தமிழகத்தில் மற்றப் பகுதிகளில் ஏற்கெனவே சலூன் கடைகள் திறக்கப்பட்டிருக்கிறது. 6. கேள்வி : அயல்நாட்டு விமானப் போக்குவரத்து எப்போது தொடங்கும்?
பதில் :
சர்வதேச விமான போக்குவரத்து ஜூன் 30 வரை தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் தொடங்குவது பற்றி ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்தியா வரவிரும்புவோர் இந்திய தூதரகங்களை அணுகலாம்.
7. கேள்வி: 60% சதவீதம் பயணிகள் மட்டும் பேருந்துகளில் பயணிக்கும் நிலையில் பேருந்து கட்டணங்களில் மாற்றங்கள் ஏதும் இருக்குமா?
பதில்:
புதியக் கட்டணங்கள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே ஏற்கெனவே பேருந்துகள் என்ன கட்டணங்கள் வசூலித்தனவோ அதனையே வசூலிக்கும். 8. கேள்வி : பாஸ்போர்ட் அலுவலகம் திறந்துள்ளார்களா? பாஸ்போர்ட்டுக்கு இப்போது விண்ணப்பிக்க முடியுமா?
பதில்:

சில மையங்கள் திறந்துள்ளன. நேர மாற்றமும் உள்ளது. அவர்களின் இணைய தளங்களுக்கு சென்று காண்பது சரியாக இருக்கும்.
கேள்வி: பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கும்?
பதில்:
பள்ளிக், கல்லூரிகள் ஜூன் 30 வரை திறப்பு இல்லை. அதேசமயம் திட்டமிட்டப்படி பள்ளிகளில் பொதுத்தேர்வு நடைபெறும். ஆன்லைன் வகுப்புகளும் எடுக்கப்படலாம் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews