Search This Blog
Friday, May 08, 2020
2
Comments
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆன்லைனில் மட்டும் மதுவை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு இடையே தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா ஆகிய அண்டை மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் ‘டாஸ்மாக்’ மதுபான கடைகள் 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுபிரியர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்தநிலையில் 43 நாட்களுக்கு பின்னர், சென்னை நீங்கலாக தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் நேற்று ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்பட்டன. நேற்று ஒருநாளில் மட்டும் சுமார் 176 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு விசாரணையின் போது, மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என நீதிபதியின் முன்பு வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நாளை காலை முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. மதுபானங்களை ஆன்லைன் மூலம் மட்டுமே விற்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மே 17 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. ஊரடங்கு முழுமையாக நீக்கப்படும் வரை தமிழ்நாட்டில் ஆன்லைன் மூலமாக மட்டுமே மது விற்க நீதிமன்றம் உத்தரவு.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகள் சரியாக பின்பற்றப்படவில்லை என தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
CourtOrder
TAMILNADU
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு; ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு; ஆன்லைனில் மட்டும் மது விற்பனை செய்ய வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Subscribe to:
Post Comments (Atom)
Ple sir may 17 ku pirakum wineshopa allow pannathinga
ReplyDeleteLadies aeillarum 45 daysa happya eruinthainga two daysa all mothers un happy. Eppadi oru incoming. Govt ku mukkiyama eilla. Ladies safety mukkiyama. Mothly once na kadaiya open pannuingapa kudi kudie keydukkum pen pillailai petra appakkal kandippa maranum appathan antha pillaikal. Ketha appa kuda poga mudiyum matram thevai
ReplyDelete