Breaking

Wednesday, May 27, 2020

B.com பட்டத்திற்கு B.C.S இணை?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது: மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
B.C.S.(bachelor of corporation secretaryship) பட்டப்படிப்பு B.com-க்கு இணையானது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. B.com-க்கு இணையானது என சான்று வழங்க பெரியார் பல்கலைக்கழக சான்றை சுட்டிக்காட்டி மதுரையில் கலைவாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., பட்டத்திற்கு இணையானது என, சான்று வழங்க கோரிய வழக்கில், மதுரை காமராஜ் பல்கலை பரிசீலிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. மதுரை, திருநகர் கலைவாணி தாக்கல் செய்த மனு: மதுரை தெற்கு மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில், கணக்கு உதவியாளராக பணிபுரிகிறேன். என் கணவர், 2015ல் இறந்தார். அலுவலகத்தில் கணக்கு மேற்பார்வையாளர் பணி, காலியாக உள்ளது.அப்பதவிக்கு, பி.காம்., அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். நான், பி.சி.எஸ்., - பேச்சிலர் ஆப் கார்ப்பரேட் செகரட்ரிஷிப் - மூன்றாண்டு பட்டப் படிப்பை, மதுரை காமராஜ் பல்கலை கீழ் உள்ள கல்லுாரியில் படித்துள்ளேன். பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, 2018ல், தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசாணைப்படி, பி.சி.எஸ்., படிப்பு, பி.காம்., படிப்பிற்கு இணையானது என, சான்று வழங்க காமராஜ் பல்கலைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கோரியிருந்தார்.நீதிபதி, ஜெ.நிஷா பானு, ''மனுவை, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'' என்றார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog