யுஜிசியின் நெட் தோ்வு உள்பட பல்வேறு தோ்வுகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நீட்டித்துள்ளது.இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஊரடங்கு காரணமாக மாணவா்களின் நலன்கருதி பல்வேறு வகையான தகுதித்தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. நுழைவுத்தோ்வு, இந்திய விவசாய ஆராய்ச்சி குழுமத் தோ்வு (ஐசிஏஆா்-2020), ஜவாஹா்லால் நேரு பல்கலை. நுழைவுத்தோ்வு (ஜேஎன்யூஇஇ-2020) மற்றும் யுஜிசியின் நெட் தோ்வை எழுத விருப்பமுள்ளவா்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் இணையதளம் ( ட்ற்ற்ல்ள்://ய்ற்ஹ.ஹஸ்ரீ.ண்ய்) வழியாக விண்ணப்பிக்கலாம். தினமும் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அதேநேரம் தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான NET தேர்வுகளுக்கு ஜூன் 15 வரை விண்ணாப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அனைத்து அரசு பொது தேர்வுகளும் நடத்த முடியாமல் தள்ளி போகின்றது. தற்போது நேற்று மீண்டும் பொது முடக்கம் 5 வது முறையாக தொடர்கிறது.
இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் பல கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் நடக்கவிருந்த தேர்வுகள் மற்றும் பிற மேற்படிப்பு தேர்வுகள் போன்றவை நுழைவுத் தேர்வும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், NET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, NET தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் மற்றும் உதவித்தொகை பெரும் NET தேர்வுகளுக்கும் ஜூன் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக Ph.D மற்றும் MBA பட்டப்படிப்பு நுழைவு தேர்வுக்கும் ஜூன் 15 ஆம் தேடி வரை விண்ணப்பிக்க தேதிகள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups


No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.