👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் இணையவழிக் கல்வியால் மின் சாதனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றை அடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் 16-ல் இருந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமுடக்கத்தை அடுத்து அனைத்துக் கல்வி நிறுவனங்களும் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே மத்திய, மாநில அரசுகள் இணையவழிக் கல்வியை அறிமுகப்படுத்தின. தனியார் பள்ளிகளும் இணைய வகுப்புகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.
வரும் கல்வியாண்டான ஜூன் 1-ம் தேதி முதல் இணையவழிக் கால அட்டவணையைத் தயாரித்து ஆன்லைன் வழிக் கற்றலை நிகழ்த்த, தனியார் பள்ளிகள் திட்டமிட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகமும் அறிவுரை வழங்கியது. இதனால் லேப்டாப், கணிப்பொறி, மொபைல் உள்ளிட்ட மின் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இணையப் படிப்புக்காக மின் சாதனங்களைக் குழந்தைகளுக்குப் புதிதாக வாங்கிக் கொடுக்க வேண்டிய தேவை பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேடிஎம் செயலிக்கு 75 ஆயிரம் மொபைல் வேண்டும் என்றும், 50 ஆயிரம் பேர் லேப்டாப் வேண்டும் என்றும் மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.