அகில இந்திய கல்லூரிகளில் இடம் பிடிப்பது (admission) எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 31, 2020

Comments:0

அகில இந்திய கல்லூரிகளில் இடம் பிடிப்பது (admission) எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அகில இந்திய கல்லூரிகளில் இடம் பிடிப்பது எப்படி? How to get admission in All India Colleges ஒ வ்வொருவருக்கும் தன் எதிர்காலம் குறித்த கனவுகள் இருக்கும். அந்த கனவை நனவாக்குவதில் உயர்கல்விக்கு மிகப்பெரிய இடம் உண்டு. பல்வேறு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் சேர்க்கைக்கு பல்வேறு நடைமுறைகளை கையாளுகின்றன. தமிழ்நாட்டில் பெரும்பாலும் மாணவர்கள் அறிந்திருப்பது ஐ.ஐ.டி.க்கு எழுதப்படும் ஜெ.இ.இ. எனப்படும் நுழைவுத்தேர்வும், மருத்துவத்திற்கு எழுதப்படும் ‘நீட்’ தேர்வும்தான். ஆனால், 11, 12-ம் வகுப்புகளில் உள்ள பாடத்திட்டத்தை கொண்டு சில நுழைவுத்தேர்வுகள் எழுதினால், அகில இந்திய பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்களும் இடம் பிடிக்க முடியும். ஜெ.இ.இ. தேர்வின் மூலம் ஐ.ஐ.டி.யில் மட்டுமல்ல NIT, II-ST, II-SC, II-S-ER, CE-C-RI, CF-TI மற்றும் பல தனியார் கல்வி நிறுவனங்களிலும் இதன் தரவரிசை பட்டியலை ஏற்றுக்கொள்கிறார்கள். ஜெ.இ.இ. மெயின் தாள்-1 அனைவருக்குமான பொதுத்தேர்வு. தாள்-2 இளங்கலை கட்டிடக்கலை மற்றும் இளங்கலை திட்டமிடல் மாணவர்கள் எழுதக்கூடியது. ஜே.இ.இ. அட்வான்ஸ் எனப்படும் தேர்விலும் இரண்டு தாள்கள் உண்டு. இதன்மூலம் சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பல்வேறு இடங்களில் இருக்கும் மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். ‘நீட்’ தேர்வு ‘நீட்’ தேர்வின் மூலம் அகில இந்திய மருத்துவக்கல்லூரிகளில் 15 சதவீதமும், தமிழ்நாட்டின் மருத்துவ சேர்க்கையில் 85 சதவீத இடத்திற்கும் சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவத்திற்கு மட்டும் இருந்தது. கடந்த ஆண்டு முதல் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி போன்ற மருத்துவ படிப்புக்கும் நீட் தேர்வின் மூலமே சேர்க்கை நடைபெறுகிறது. இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவ படிப்பிற்கு நுழைவுத்தேர்வு தேவையில்லை. இந்த தேர்வின் மூலம் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவக் கல்லூரியிலும், ஏ.எம்.சி. ஆயுதப்படை மருத்துவ கல்லூரியிலும், தமிழகத்தில் உள்ள 47-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேசிய அளவிலான 21-க்கும் மேற்பட்ட ஓட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை என்.சி.ஹெச்.எம். எனப்படும் நுழைவுத்தேர்வு மூலம் நடைபெறுகிறது. இதன்மூலம் சென்னை தரமணியில் உள்ள தேசிய அரசு கல்லூரி உள்பட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் சேரலாம். இதனை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. தமிழ்நாட்டில் தமிழக அரசின் 25 கல்வி நிறுவனங்களும், 13 உணவு கைவினை நிறுவனங்களும் உள்ளன. மத்திய சட்டக்கல்லூரி மத்திய சட்டக்கல்லூரிகளில் சேர ‘கிளாட்’ எனப்படும் நுழைவுத்தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகிறது. இதன்மூலம் திருச்சியில் உள்ள தேசிய சட்டக்கல்லூரி உள்பட 23 கல்லூரிகளில் சேர முடியும். நம்மில் பலருக்கும் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் உள்பட பல நாடுகளின் மொழியை கற்க ஆசை இருக்கும். இதற்கு தனி பயிற்சி வகுப்புகளில் சேர்வதைவிட, ஐதராபாத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் மொழிக்கல்வி நிலையத்தில் சேர்ந்து மொழி வல்லுனராகி, சிறந்த வேலைவாய்ப்பினை பெற முடியும். 12-ம் வகுப்பு ஆங்கில பாடத்தை மட்டும் கொண்டு இந்த தேர்வு இணையதளத்தின் மூலம் நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறுகிறது. இதன்மூலம் மாணவர்களுக்கு இந்திய அரசின் பணிகள் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் வேலை செய்வதற்கு வாய்ப்புகள் கிடைக்க பெறுகிறது. புள்ளியியல் நிறுவனம் கணிதத்துறையில் சாதிக்க நினைப்பவர்கள் இளங்கலை கணித பட்டம் பெறுவதைவிட பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் சேர்ந்து படிக்கலாம். அதற்கு நுழைவுத்தேர்வின் மூலம் மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள். இதன்மூலம் புள்ளியியல் மட்டுமல்லாமல் கணிதத்திலும் சிறந்த வல்லுனராக முடியும். இந்திய அளவிலான 14 வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்து இளங்கலை படிக்க மாணவர்கள் நுழைவுத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் கோயம்புத்தூரிலும், தேசிய ஆராய்ச்சி நிறுவனம் திருச்சி மற்றும் சென்னையிலும் உள்ளன. இதற்கான பாடத்திட்டத்தை ஆராய்ச்சி நிறுவனமே வழங்கும். தேசிய தேர்வு முகமை இதனை நடத்துகிறது. 65 கல்வி நிறுவனங்களிலும், நான்கு நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இந்த மதிப்பெண் தகுதியாக எடுத்து கொள்ளப்படுகிறது. தேசிய அளவிலான அறிவியல் பல்கலைக்கழகங்களில் சேர பொது நுழைவுத்தேர்வு மூலம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் திருவாரூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இதன்மூலம் ஒருங்கிணைந்த முதுநிலை கல்வியை 12-ம் வகுப்பிற்கு பிறகு தேர்ந்தெடுத்து படிக்கலாம். சமூக அறிவியல் படிப்பு காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாடு பற்றிய இளங்கலை படிப்புக்கு இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடைபெறுகிறது. சென்னை உள்பட 12 கல்வி நிறுவனங்களில் இதன்மூலம் சேர்க்கை நடைபெறுகிறது. இதை படித்தால் காலணி நிறுவனங்களிலும், சர்வதேச காலணி வணிகத்திலும் ஈடுபட முடியும். ஐ.ஐ.டி.யில் பொறியியல் தொழில் நுட்பம் மட்டுமல்லாது சமூக அறிவியல் படிப்புகளும் உள்ளன. இதில் மாணவர்கள் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தொழில்நுட்பக்கல்வி நிறுவனங்களில் உள்ள இளங்கலை நாகரிக தொழில்நுட்பம் மற்றும் இளங்கலை வடிவமைப்பு கல்வியில் சேர பொது நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 16 மாநிலங்களில் இந்த கல்வி நிறுவனம் உள்ளது. கல்வி நிறுவனமே தேர்வுக்குரிய பொதுப்பாடத்திட்டத்தை அளிக்கும். அதில் தேர்ச்சி பெறுவதன் அடிப்படையில் 16 கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். இந்திய கடல்சார் பல்கலைக்கழகங்களில் தொழில் நுட்பம் இளங்கலை பட்டயபடிப்பிற்கு பொதுதேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட 6 மாநிலங்களில் இந்த கல்வி நிறுவனம் இயங்குகிறது. மேற்குறிப்பிட்ட அனைத்து கல்வி நிலையங்களிலும் கல்வி கட்டணம் மிகக்குறைவு. எனவே, 11, 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்வுகளில் தமிழக மாணவர்களை பங்கேற்க செய்வதே நமது கடமையாகும். -பேராசிரியை ஆர்.காயத்ரி, கல்வியாளர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews