கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. பலி எண்ணிக்கையானது 160 ஆக உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் இதன் பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக ராயபுரம் , திரு.வி.க நகர் , கோடம்பாக்கம் , தண்டையார்பேட்டை , தேனாம்பேட்டை மண்டலங்களில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பாதிப்பால் , பொது சேவைகளில் உள்ள பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி தலைமையிடம் உட்பட பல்வேறு மண்டலங்களில் உள்ள அதிகாரிகள் , ஊழியர்களுக்கு சில நாட்களாக தொற்று ஏற்பட்டு வருகிறது. இதுவரை 219 அதிகாரிகள் , ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தொற்று கண்டறியப்பட்டவர்கள் , அவர்களது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.