Breaking

Friday, May 01, 2020

தனது பள்ளியில் படிக்கும் 90 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.500 வழங்கிய தலைமையாசிரியை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் தனது பள்ளியில் படிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தன் சொந்த செலவில் தலா ரூ. 500 ஐ தலைமையாசிரியை வியாழக்கிழமை மாலை வழங்கினார்.சேலம் மாவட்டம் தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட செக்குமேடு என்ற பகுதியில் ஊ.ஒ.தொ.பள்ளி, 8-வது வார்டு என்ற அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 90 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில் தலைமையாசிரியை சடையம்மாள் உள்பட நான்கு ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.இந்நிலையில், தனது பள்ளியில் படிக்கும் ஏழைக்குழந்தைகளின் குடும்ப சூழலைக்கருத்தில்கொண்ட தலைமையாசிரியை சடையம்மாள், தனது சொந்த பணத்திலிருந்து ரூ.500 வீதம், பள்ளியில் படிக்கும் 90 குழந்தைகளின் குடும்பங்களுக்கும் வீடு வீடாகச்சென்று வழங்கினார். 90 குடும்பங்களுக்கும் தலா ரூ.500 ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 45 ஆயிரத்தை வழங்கினார். அதற்காக குழந்தைகளின் பெற்றோர்,மிகுந்த மகிழ்ச்சியுடன், உருக்கமாக நன்றி தெரிவித்துக்கொண்டனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog