தமிழகம் முழுக்க பெய்யும் மழை.. மழை மூலம் கொரோனா பரவுமா?.. நீருக்கும் வைரசுக்கும் உள்ள தொடர்பு என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 26, 2020

Comments:0

தமிழகம் முழுக்க பெய்யும் மழை.. மழை மூலம் கொரோனா பரவுமா?.. நீருக்கும் வைரசுக்கும் உள்ள தொடர்பு என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மிழகம் முழுக்க மழை பெய்து வரும் நிலையில் மழை மூலம் கொரோனா பரவுமா என்ற கேள்வி மக்களுக்கு அதிகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு நாட்டு மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவி வரும் அதே நேரத்தில் இன்னொரு பக்கம் தீவிரமாக மழையும் பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதல் சென்னையில் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சில தென் மாவட்டங்களில் கூட மழை பெய்து வருகிறது. சென்னையில் ஆலந்தூர், கிண்டி, அசோக் நகர், சூளைமேடு, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், விருகம்பாக்கம், அண்ணா நகர் போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது

என்ன கேள்வி
இந்தநிலையில் மழை மூலம் கொரோனா பரவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது கொரோனா பாதித்த ஒருவர் மழையில் நிற்கிறார். அவரின் உடலின் மழை நீர் வடிந்து சென்று வேறு ஒருவர் மீது அந்த தண்ணீர் பட்டால் கொரோனா பரவுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரை தொடாமலே வேறு ஒருவருக்கு மழை மூலம் கொரோனா பரவுமா என்று பலரும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர்.
மழை மூலம் பரவாது
இது தொடர்பாக பல நாட்டு மருத்துவர்கள் இணையத்தில் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி மழை மூலம் கொரோனா பரவும் என்பது எங்கும் உறுதி செய்யப்படவில்லை. மழை மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளனர். ஆய்வு ரீதியாக இந்த சந்தேகத்தை யாரும் உறுதி செய்யவில்லை. அதாவது கொரோனா தாக்கிய ஒருவர் மழையில் நனைவதன் மூலம் இன்னொருவருக்கு கொரோனா பரவ வாய்ப்பு இருப்பதாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

மழைக்காலம் என்பதால் பரவாது
இதனால் மழை மூலம் கொரோனா பரவுமா என்று யாரும் அச்சப்பட வேண்டாம். அதே சமயம் மழை காலம் என்பதால் வெப்பநிலை குறையும். இதனால் கொரோனா பரவும் வேகம் அதிகரிக்குமா என்றும் சிலர் கேட்கிறார்கள். ஆனால் மழை காலத்தில் கொரோனா வேகம் அதிகரிக்கும் வேகம் என்பது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் வெயில் காலத்தில் கொரோனா வேகம் குறையும் என்பதும் இன்னும் உறுதியாக கூறப்படவில்லை. சில ஆராய்ச்சி முடிவுகள் மட்டுமே சூரிய ஒளி கொரோனாவை கொல்லும் என்று கூறுகிறது. ஆனால் இதுவும் கூட மழை காலத்தில் கொரோனா வேகம் எடுக்கும் என்று கூறவில்லை.
சுத்தப்படுத்த உதவும்
ஆனால் கொரோனா பரவும் இந்த சமயத்தில் மழை பெய்வது ஒரு வகையில் நன்மைதான் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே கொரோனா காரணமாக தமிழகம் முழுக்க ஏன் நாடு முழுக்க பல இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டுள்ளது. மழை மூலம் இந்த கிருமி நாசினிகள் பல இடங்களுக்கு பரவும். கிருமி நாசினி பரவுவதை மழை ஊக்குவிக்கும்.இதன் மூலம் சாலையில் இருக்கும் கிருமிகள் அடித்து செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குடிநீருக்கு வராது
இன்னொரு பக்கம் சிலர் குடிநீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என்றும் கேட்கிறார்கள். ஆனால் தமிழகம் முழுக்க நாம் குடிக்கும் நீர் முறையாக சுத்திகரிக்கப்பட்ட பின்புதான் பயன்பாட்டிற்கு வருகிறது. அதேபோல் கழிவு நீரும் மறு சுழற்சி செய்யப்பட்டு மிக தீவிரமாக சுத்திகரிக்கப்பட்ட பின்புதான் பயன்பாட்டிற்கு வருகிறது. அதனால குடிநீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை. நீங்கள் தைரியமாக தண்ணீர் குடிக்கலாம்.
பெரிய அளவில் பாதிப்பு
இதன் மூலம் குடிநீர் மூலம் அல்லது சாதாரண நீர் மூலம் கொரோனா பரவ வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் இதை இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தவோ மறுக்கவோ முடியாது . ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகளில் மொத்தமாக ஆறுகளை சுத்திகரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. எங்கும் எதிலும் ரிஸ்க் எடுக்க முடியாது என்பதால் ஆறுகளை, நீர் நிலைகளை சுத்தம் செய்கிறார்கள். விரைவில் இது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews