வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 22, 2020

Comments:0

வாடிக்கையாளர்களுக்கு SBI எச்சரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் வந்தாலும் வந்தது, மக்களை எல்லாம் வீட்டிலேயே முடக்கிப் போட்டு விட்டது. ஆனால் ஆன்லைன் திருடர்கள், நெட் பேங்கிங் மோசடிக்காரர்கள் மற்றும் இணையத்தின் வழி வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை திருடுபவர்களுக்கு எல்லாம் இந்த கொரோனா லாக் டவுன் செல்லுபடி ஆகாது போல் இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த இணைய திருடர்களும் தங்கள் கை வரிசையை காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
எச்சரிக்கை
இப்படி ஒரு சம்பவத்தைப் பற்றித் தான் எஸ்பிஐ வங்கி நிர்வாகம், தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் சொல்லி இருக்கிறது. மோசடிக்காரர்கள் பல புதிய டெக்னிக்களைப் பயன்படுத்தி சைபர் திருட்டுத்தனங்களைச் செய்து கொண்டு இருக்கிறார்கள். உஷாராக இருக்கச் சொல்லி எச்சரித்து இருக்கிறது எஸ்பிஐ.
புதிய வழி
இப்போது ஆன்லைன் திருடர்கள், எஸ்பிஐ வங்கி எஸ் எம் எஸ் அனுப்புவது போலவே அனுப்புகிறார்கள். அந்த லிங்கை க்ளிக் செய்தால் அச்சு அசலாக எஸ்பிஐ வங்கியின் நெட் பேங்கிங் பேஜ் போலவே இருக்கும். அது போன்ற எஸ் எம் எஸ்-கள் வந்தால் அதை டெலிட் செய்து விடுங்கள் என எச்சரிக்கிறது எஸ்பிஐ.
க்ளிக் செய்யாதீங்க
அப்படி வரும் எஸ் எம் எஸ் லிங்குகளை க்ளிக் செய்து, எந்த நெட் பேங்கிங் சம்பந்தப்பட்ட விவரங்களையும் பகிர வேண்டாம் எனவும் தன் ட்விட்டர் பக்கத்தில் எச்சரித்து இருக்கிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா. எஸ்பிஐ எச்சரித்த வலைதளம் (வெப் சைட்) இது தான் - http://www.onlinesbi.digital
எப்படி ஏமாற்றுவார்கள்
இந்த http://www.onlinesbi.digital லிங்கை அனுப்பி, உங்கள் நெட் பேங்கிங் பாஸ்வேர்டை அப்டேட் செய்யச் சொல்வார்கள் அல்லது, உங்கள் கணக்கு விவரங்களை அப்டேட் செய்யச் சொல்வார்கள். அப்படி ஏதாவது லிங்க் வந்தால் அதை தயர்வு செய்து க்ளிக் செய்ய வேண்டாம் எனச் சொல்லி இருக்கிறது எஸ்பிஐ. எஸ்பிஐயின் ட்விட்டைக் காண லிங்கை க்ளிக் செய்யவும்: https://twitter.com/TheOfficialSBI/status/1248932047768317953
ஏற்கனவே நம் கையில் போதுமான பணம் இல்லை. இதற்கு மத்தியில், ஆன்லைன் திருட்டு ஏதாவது நடந்து இருக்கும் பணமும் பறி போனால் கொரோனா லாக் டவுன் காலத்தில், யாரிடமும் சென்று முறையாக புகார் கூட கொடுக்க முடியாது. எனவே மக்களே நாம் தான் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். http://www.onlinesbi.digital என்கிற வலைதளத்தை நன்றாக பார்த்து வைத்துக் கொள்ளுங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews