👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சமூக வலைதளத்தில் பரவும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை போலியானது என்றும் அரசு அறிவித்தால் மட்டுமே உண்மை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த காலகட்டத்தில் நடைபெற இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
அதன்பின்னர், அந்த தேர்வு ரத்து செய்யப்படுமா? என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
இந்த நிலையில் ‘ஷேர் சாட்’ என்ற செயலியில் தற்போது எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்தும், எந்தெந்த தேதியில், எந்தெந்த தேர்வுகள் நடைபெறும் என்பது குறித்த அட்டவணையும் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அட்டவணையில் மே மாதம் 20-ந்தேதி தொடங்கி, 29-ந்தேதியுடன் தேர்வு முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அரசு தரப்பில் இருந்து அறிவிப்பு வந்தால் மட்டுமே உண்மையான தகவல் என தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.