வாட்ஸ்ஆப் செயலியில் மேற்கொள்ளப்படும் புதிய மாற்றங்களின் படி அரசாங்கம் பயனர் குறுந்தகவல்களை கண்காணிக்க இருப்பதாக தகவல் வேகமாக பரவுகிறது.
மூன்று புளூ டிக்கள்
அதன்படி வேகமாக பரவும் குறுந்தகவல்களில் பயனர் அனுப்பும் குறுந்தகவல்களுக்கு மூன்று புளூ டிக்கள் வரும் பட்சத்தில் அதனை அரசு நிறுவனம் கண்காணித்து இருக்கும் என்று கூறப்பட்டது. மேலும் இரண்டு புளூ டிக் மற்றும் ஒரு சிவப்பு நிற டிக் வரும் பட்சத்தில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இத்துடன் இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த இதனை வேகமாக பகிரக்கோருகிறது.
இதற்குமுன்னதாக இதேபோன்ற குறுந்தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு இருந்தது, முந்தைய வைரல் பதிவுகளில் பி.பி.சி செய்தி நிறுவனத்தின் செய்தி தொகுப்பு போன்ற படமும் சேரக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்சமயம் இதே தகவலினை பிஜபி வெளியிட்டு இருப்பதாக கூறி பகிரப்பட்டு வருகிறது. இதை தொடர்ந்து பிஜபி விளக்கம் கூறியுள்ளது.
வாட்ஸ்ஆப் செயலியில்
வாட்ஸ்ஆப் செயலியில் புதிய டிக் பற்றிய விவரங்கள் அந்நிறுவன வலைதளத்தில் அப்டேட் செய்யப்படவில்லை, வலைதளத்தில் தற்சமயம் அப்டேட் செயயப்படவில்லை, வலைதளத்தில் தற்சமயம் இருப்பது போன்று இரண்டு புளூ டிக் பற்றிய விவரங்களே இடம்பெற்றிருக்கின்றன.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.