Search This Blog
Friday, April 10, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அனைவருக்கும் தேர்ச்சி திட்டம் இல்லை. தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது,'' என, முதல்வர், இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஒரு மாதமாக கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. மார்ச், 27ல் துவங்கவிருந்த, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஊரடங்கு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. அதனால், 10ம் வகுப்பு தேர்வு எப்போது நடக்கும் என, மாணவர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில், '10ம் வகுப்பு தேர்வு ரத்தாகும்; அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட உள்ளது.
'கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்களில் மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது' என, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. பத்தாம் வகுப்பு தேர்வு குறித்து, ஆசிரியர் சங்கங்கள், பள்ளி நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், தங்கள் விருப்பங்களை அறிக்கையாக வெளியிட்டு வருகின்றனர். ஆனால், 'தேர்வு குறித்து, முதல்வர் முடிவு செய்வார்' என, பள்ளி கல்வி அமைச்சர், செங் கோட்டையன் திட்டவட்டமாக அறிவித்தார்.இதுகுறித்த கேள்விக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று அளித்த பதில்:பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து, மாணவர்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம்; தேர்வை எப்போது நடத்துவது என்பதை, பல்வேறு வகையில் பரிசீலித்து வருகிறோம்.
ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழங்கப்பட்டதை போல, 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும், தேர்ச்சி வழங்க முடியாது.பத்தாம் வகுப்பு தேர்ச்சியானது, அரசின் அனைத்து வகை பணிகளுக்கும், அடிப்படை கல்வியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும், அடுத்த கட்ட படிப்புக்கு செல்வதற்கான முக்கிய படிப்பாக உள்ளது. எனவே, எந்த மாணவர் எப்படி படிக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள, 10ம் வகுப்பு தேர்வு அவசியம். தேர்வு குறித்து, உரிய நேரத்தில் அரசு அறிவிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஊடகங்களை சந்தித்து முதல்வர் எடப்பாடி பழினிசாமி பேட்டி அளித்தார்.
அப்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.
குழப்பம் ஒன்றும் இல்லை. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது ஒருவர் அடுத்த நிலைக்கு செல்லக்கூடிய முக்கியமான தேர்வு. 9ஆம் வகுப்புவரை மாணவர்கள் போன்று தேர்வெழுதாமல் தேர்ச்சி அளிக்க முடியது. எனவே சூழ்நிலையினை பொருத்து விரைவில் அறிவிக்கப்படும் என கூறினார்.
எனவே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தவே அதிக வாய்ப்புள்ளது. மாணவர்கள் தங்களுக்கு கிடைத்துள்ள இந்த ஊரடங்கு நாட்களில் தங்களை தேர்வுக்கு நல்ல முறையில் தயார் செய்துகொள்ளவும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
1-10th
CM NOTICE
CORONA
EXAMS
10ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு ; வதந்திகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி
10ம் வகுப்பு பொதுத்தேர்வு உண்டு ; வதந்திகளுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.