Coronavirus Lockdown: போட்டித்தேர்வுக்கு படிக்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 09, 2020

Comments:0

Coronavirus Lockdown: போட்டித்தேர்வுக்கு படிக்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உள்ளது. அதற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. TNPSC, UPSC, SSC போன்ற முக்கிய போட்டித் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, படிப்பதற்கு நல்ல அருமையான கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி போட்டித்தேர்வுக்கு முழு மனதோடு படித்தால், நிச்சயம் வெற்றி பெற்று விடலாம். போட்டித்தேர்வுகளுக்கு புதிதாக படிப்பவர்களும், இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி படிக்கலாம். அந்த வகையில், போட்டித்தேர்வக்கு படிப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உள்ளது. அதற்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. முக்கிய போட்டித் தேர்வுகள், பொதுத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டு விட்டன. ஏற்கனவே போட்டித்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, படிப்பதற்கு நல்ல அருமையான கூடுதல் கால அவகாசம் கிடைத்துள்ளது. இதனை பயன்படுத்தி போட்டித்தேர்வுக்கு முழு மனதோடு படித்தால், நிச்சயம் வெற்றி பெற்று விடலாம். போட்டித்தேர்வுகளுக்கு புதிதாக படிப்பவர்களும், இந்த கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி படிக்கலாம். அந்த வகையில், போட்டித்தேர்வக்கு படிப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கு பார்ப்போம்.
திட்டமிடல்:
தேர்வுகளுக்கு படிப்பதற்கு திட்டமிடல் என்பது அடிப்படையான விஷயம் ஆகும். நீங்கள் படிப்பதற்கான கால அட்டவணையை சரியாக திட்டமிட வேண்டும். அதே நேரத்தில், திட்டமிடுகிறேன் என்ற பெயரில் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. மேலும், தேவைப்படும் போதெல்லாம் இஷ்டத்துக்கு அந்த கால அட்டவணையை மாற்றக் கூடாது. முதலில் சரியான திட்டமிட்டு வகுத்துள்ளதை, காலம் நேரம் தவறாமல் தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.
நேரம்:
உங்களைப் பற்றி, நீங்கள் எப்படி படிக்கிறீர்கள் என்பது பற்றி உங்களுக்கு தான் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாது. எனவே, சுயகட்டுபாட்டுடன் நேரம் தவறாமல் படிக்க வேண்டும். கொரோனா ஊரடங்கு உங்களை சோம்பலாக்க முயற்சிக்கும். ஆனால், அதற்கு சிறிதும் இடம் கொடுக்காமல், மனதை பக்குவமாக்கி, போட்டித்தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதையே குறிக்கோளாக வைக்க வேண்டும். தூக்கம் வரும் நேரத்தில் படிக்கக்கூடாது. படிக்கும் நேரத்தில் தூக்கம் வரக்கூடாது. படிக்கும் போது தூக்கம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
பாடத்திட்டம்:
போட்டித்தேர்வு என்றாலும் சரி, பொதுத்தேர்வு என்றாலும் சரி. முதலில் என்ன பாடத்திட்டம் வகுத்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அத்தனை பாடப்புத்தகங்களும் நம்மிடம் இருக்க வேண்டும். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால், வெளியில் சென்று பாடப்புத்தகங்களை வாங்க வேண்டாம். இப்போது நம்மிடம் இருக்கும் பாடங்களை முதலில் படிக்க வேண்டும். பிறகு மற்ற புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம். பாடத்திட்டத்தில் கடினமான பாடங்களுக்கு அதிக நேரம் கொடுத்தும், எளிதான பாடங்களை சட்டென்றும் படிக்க வேண்டும்.
ஓய்வு:
தொடர்ச்சியாக படிக்கும் வேளைகளுக்கு இடையில், சிறிது ஓய்வு கொடுக்க வேண்டும். சில நிமிடங்கள் ஓய்வு கொடுத்தால், அடுத்தாக படிக்கும் போது புத்துணர்ச்சியாக இருக்கும். நீங்கள் படித்ததை மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்து, மனதில் பதிய வைக்க வேண்டும். முக்கியமான விஷயம், படித்தவுடன் உறங்கக்கூடாது. தூங்கி எழுந்தவுடன் புத்துணர்ச்சியாக இருக்கும் போது படிக்க வேண்டும்.
சுய தேர்வு:
முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள், மாதிரி வினாத்தாள் ஆகியவற்றைக் கொண்டு நீங்களே உங்களை அடிக்கடி சுயமதிப்பீடு செய்ய தேர்வு வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாடத்தை படித்து முடித்தவுடன், அந்த பாடத்தில் உள்ள கேள்விகளுக்க விடையளிக்க வேண்டும். இவ்வாறு நீங்களே உங்களுக்கு வைக்கும் தேர்வுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளக்கூடாது. மிகக்குறைந்த நொடிகளில் விடையளிக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான், தேர்வு சமயத்திலும், குறிப்பிட்ட நேரத்துக்குள் விடையளிக்க முடியும்.
வதந்திகளை நம்பாதீர்:
கொரோனா வைரஸ் பரவுவதை விட, அது பற்றிய வதந்திகள் அதிகமாக பரவுகிறது. சில நேரங்களில், அவ்வாறு வரும் செய்திகளை உங்களை பதைபதைப்புக்கு உள்ளாக்கும். எந்த செய்தியாக இருந்தாலும், அதனை சம்பந்தப்பட்ட அரசு இணையதளங்களிலோ, அதிகாரப்பூர்வ செய்தி தளங்களிலோ சென்று பார்க்க வேண்டும். அதன்பிறகே செய்தி உண்மையா, பொய்யா என்பது தெரியவரும். குறிப்பாக தேர்வுகள் ஒத்திவைக்கபட்டு விட்டன, தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன என்றெல்லாம் தகவல்கள் வரும். அவை அனைத்தும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று பார்க்க வேண்டும்
உடல் ஆரோக்கியம்:
எல்லாவற்றையும் தாண்டி இந்த இக்கட்டான சூழலில் உங்களின் உடல்நலம் மிகமிக முக்கியமானது. கொரோனா வைரஸ் பல விழிப்புணர்வுகள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். இது உங்களுக்கு மட்டுமல்ல, மற்றவர்களின் உடல்நலனையும் சார்ந்த விஷயங்கள். எனவே, வீட்டில் இருப்போம், பாதுகாப்பாய் இருப்போம். தேர்வுக்கு தயாராவோம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews