EEE, ECE இரண்டிற்கும் உள்ள விரிவாக்கம் என்ன? EEE - Electrical and Electronic Engineering. ECE- Electronics and Communication Engineering
EEE என்பது முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் பற்றிய பாடங்களாக இருக்கும். ECE ல் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் ஆகியவையோடு, மைக்ரோ பிராசசர், டிரான்ஸ்மிஸன், டிஜிட்டல் கம்யூனிகேஷன் உள்ளிட்ட பாடங்களும் இருக்கும்
ECE கடினமாக இருக்குமோ?
பொதுவாக ECE படிப்பும் மற்ற இன்ஜினியரிங் படிப்புகளைப் போலவே சிறிது கடினமாகத்தான் இருக்கும். ஆனால், கனிதம், இயற்பியல் படிப்புகளில் நல்ல ஆர்வம் உள்ளவர்களுக்கு இது எளிதான பாடம் ஆகும். லாஜிக் புரோகிராமிங், C, C++ போன்ற கோடிங் பாடங்கள் புரிந்து கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்
ECE, EEE இரண்டிலும் எந்த துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும்?
EEE படிப்பவர்களுக்கு எலெக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறை சார்ந்த பிரிவில் நல்ல வேலைவாய்ப்புகள் உண்டு. அதே நேரத்தில் ECE படிப்பவர்களுக்கு மேற்கண்ட துறைகளிலும், ஐடி துறைகளிலும் வேலைவாய்ப்புகள் உண்டு
EEE படிப்பவர்கள் GATE தேர்வுக்கு நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும். அதே போல், எதிர்காலத்தில் எனர்ஜி துறைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் களங்கள், அணு சக்தி துறைகளில் அதிக மவுசு இருக்கும். எலெக்ட்ரிக் கார்கள், மின்பயன்பாட்டு உற்பத்தி போன்றவை எதிர்காலத்தில் நன்றாக இருக்கும். எனவே, இவைகளில் கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
ECE எதிர்காலம் எப்படி இருக்கும்?
மொபைல் டிரான்ஸ்மிஷன், மொபைல் கம்ப்யூட்டிங் போன்ற உள்ளிட்ட துறைகள் 2025 ஆம் ஆண்டுக்குப் பிறகு நல்ல முன்னெற்றம் காணும். எனவே, ECE படிப்பவர்கள் அதற்கு ஏற்ப கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளில் நன்கு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.