நிமோனியா என்னும் கொடிய பாதிப்பை கரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தி, நோயாளிகளுக்கு மூச்சுக்கோளாறை ஏற்படுத்திவிடுகிறது. இறப்பு விகிதம் 2.5ஆக இருக்கும் கரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் அனைத்து நாடுகளும் மும்முரமாக செயல்பட்டுவருகிறது.
இந்தநிலையில், குளோரோகுயின் மருந்து கரோனா வைரஸிற்கு சரியான தீர்வாக இருக்குமா என்பதுகுறித்தும் சில ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு வருகிறது. அதாவது, 70 ஆண்டு காலம் பழமை வாய்ந்த குளோரோக்குவின், கரோனா வைரஸை எதிர்கொள்ள போதுமானது என்றே அந்த கட்டுரைகள் விளக்குகின்றன. குளோரோக்குவின் மருந்துக்கு, வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது எனவும் உடலுக்குள் பெருகும் வைரஸின் எண்ணிக்கையை மிக எளிதில் குறைக்கும் தன்மை உள்ளது எனவும் அதன் காரணமாகவே கண் பார்வை இழக்க நேரும் பக்க விளைவு இருந்தாலும் கூட இந்த மருந்தை பயன்படுத்த ஆலோசானைகள் நடந்துவருவதாக அந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் உருண்டையான வடிவத்திலும், SARS வைரஸின் தோற்றத்தை ஒத்து இருப்பதால், குளோரோகுயின் மிகச்சரியாக அதன் வேலையை செய்ய முடியும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
வைரஸுக்கு எதிரான குளோரோகுயினின் தன்மையை வைத்து அதனை கரோனாவிற்கு மருந்தாக உலகம் அனைத்திலும் பயன்படுத்த முடிவு செய்தால், எந்த வகை நோயாளிகளுக்கு அதனை உபயோகிக்கலாம், எந்த அளவு கொடுக்கவேண்டும்? மற்றும் எத்தனை நோயாளிகளுக்கு கொடுக்கலாம் என்பது குறித்த தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஹைட்ராக்ஸி குளோரோகுயினுக்கும் குளோரோகுயினுக்கும் உள்ள வித்தியாசம் குறித்து மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். அது பற்றிய தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
குளோரோகுயின் பற்றிய ஆய்வுகள்:
சீனாவில் கரோனா நோயாளிகள் 23 பேரிடம் பரிசோதனை செய்து பார்த்ததில் குளோரோக்குயின் மருந்து, கரோனா வைரஸ் பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது என ஆய்வு முடிவு தெரிவிக்கின்றது.
கரோனா வைரஸுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், பல மருந்துகளை கரோனாவிற்கு மருந்தாக பயன்படுத்தமுடியுமா என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்துபார்த்துவருகின்றனர். அதில், குளோரோகுயின் பற்றி உலகில் உள்ள பலருக்கு தெரிந்திருக்கிறது. ஆனால், எபோலா வைரஸுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்ட ரெம்டெசிவிர் (remdesivir), கரோனா வைரஸுக்கு தகுந்த மருந்தாக இருக்கும் என சில மருத்துவர்கள் கூறிவருகின்றனர்.
ரெம்டெசிவிர், அமெரிக்க அரசு மற்றும் கைலீட் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்த மருந்து. அதனை எபோலா வைரஸ் தொற்றிற்கு பயன்படுத்தினர். மனித உடலுக்குள் நிகழும் வைரஸ் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் தன்மை இந்த மருந்திற்கு உள்ளதால், கரோனா வைரஸுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என அவர்கள் விவாதிக்கின்றனர். அவர்களது இந்த பரிந்துரைக்காக, பலவிதமான ஆய்வுகளையும் தற்போது அவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
கரோனா வைரஸ் உருண்டையான வடிவத்தில் இருப்பதாலும், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு மிகவும் வேகமாக பரவிவிடுவதாலும் அதற்கு தகுந்தாற்போல தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கவேண்டும் என்கின்றனர் இந்திய ஆராய்ச்சியாளர்கள். வைரஸ்களில் இருக்கும் S Protien-ன் தன்மையை வைத்துப்பார்க்கும்போது SARS வைரஸுக்கும் கரோனா வைரஸுக்கும் 12.8 % அளவே மாறுபாடுகள் இருப்பதாக அறிஞர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து, Peptide வகையானதாக இருக்கவேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கின்றனர். இப்படி கரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல ஆராய்ச்சியாளர்கள் களமிறங்கினாலும், தற்போது கடைபிடிக்கப்பட்டுவரும் முழு ஊரடங்கு, கரோனா வைரஸுக்கு தீர்வாகிவிடுமா என்று பலர் ஆராயத்தொடங்கிவிட்டனர். கரோனா வைரஸுக்கு உகந்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, கரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தவே அனைத்து நாடுகளும் போராடிவருகின்றன. அதற்கு முழு ஊரடங்கு அவசியமில்லை என்று கூறுகிறது ஒரு ஆய்வுக்கட்டுரை.
மக்களின் எதிர்பார்ப்பு:
கரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது, அதற்கான தற்காலிக தீர்வுக்கான மருந்துகளை கண்டுபிடிப்பது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நேரங்களை செலவிட்டாலும், கரோனா வைரஸுக்கான நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்பதும் அதற்கான மருந்தை வெகு விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.