Search This Blog
Friday, March 13, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அரசு கல்லுாரி வளாகங்களில், 2.50 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்,'' என, உயர் கல்வித்துறை அமைச்சர், அன்பழகன் அறிவித்தார்.
சட்டசபையில், அவரது அறிவிப்புகள்: தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின், மதுரை மண்டல இணை இயக்குனர் அலுவலகம், 1.14 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும். பழமை வாய்ந்த, ஊட்டி அரசு கலை கல்லுாரி கட்டடம், 8.20 கோடி ரூபாய்; புதுக்கோட்டை, மன்னர் கல்லுாரி கட்டடம், 2.40 கோடி ரூபாய் செலவில் புனரைமைக்கப்படும்
அரசு கல்லுாரி வளாகங்களில், 2.50 கோடி ரூபாய் செலவில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். திருவள்ளுவர் பல்கலை மாணவர்களின், உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி திறனை மேம்படுத்தும் வகையில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆய்வக உபகரணங்கள் வாங்கப்படும்
சென்னை, எழும்பூரில் உள்ள பழமைவாய்ந்த, தமிழ்நாடு ஆவண காப்பக கட்டடம், 9.41 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும். திருச்சி, அண்ணா அறிவியல் மைய கோளரங்கம், 3 கோடி ரூபாய் செலவில், மின்னணு தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்படும்
சென்னை பல்கலையின், அனைத்து வளாகங்களிலும், மகளிர் பாதுகாப்பு வசதி மையம் நிறுவப்படும். இங்கு, 1.50 கோடி ரூபாய் செலவில், 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்
சிதம்பரம், அண்ணாமலை பல்கலையில், 4.80 கோடி ரூபாய் செலவில், 24 ஆயிரம் சதுர அடியில், சிறப்பு கருவிகள் மைய கட்டடம் கட்டப்படும். காரைக்குடி, அழகப்பா பல்கலையில், 3 கோடி ரூபாய் செலவில், 'பயோ பிளாஸ்டிக்' என்ற, தாவர நெகிழி மையம் அமைக்கப்படும
கோவை, பாரதியார் பல்கலையில், உயராய்வு மையம் மற்றும் அருங்காட்சியகம், 2.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். மேற்கு தொடர்ச்சி மலையில், அழிவின் விளிம்பில் உள்ள தாவரங்களை பாதுகாக்க, 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தாவரவியல் பூங்கா அமைக்கப்படும
திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், 1.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மகளிர் விடுதி கட்டடம் கட்டப்படும். மாணவர் விடுதியில், 1.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நவீன சமையல் அறை, உணவருந்தும் கூடம் கட்டப்படும்.
சேலம், பெரியார் பல்கலையில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைக்கான கட்டடத்தில், 5.30 கோடி ரூபாய் செலவில், கூடுதல் தளங்கள் கட்டப்படும். பல்கலை வளாகத்தில், 300 கிலோ வாட் திறன் உள்ள மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும
சென்னையில், அண்ணா பல்கலை உணவக கட்டடம், 25 கோடி ரூபாயிலும், இயந்திரவியல் துறை ஆய்வக கட்டடம், 12 கோடி ரூபாய் செலவிலும் கட்டப்படும்.இவ்வாறு, அமைச்சர் அறிவித்தார்.
மாணவர்கள், பேராசிரியர்கள் பாதுகாப்புக்காக அரசு கல்லூரி வளாகங்களில் ரூ.2.50 கோடி செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் தாவர நெகிழி மையம் அமைக்கப்படும். சென்னை பல்கலை கழகத்தின் 5 வளாகங்களிலும் மகளிர் பாதுகாப்பு வசதி மையம் நிறுவப்படும் மற்றும், ரூ.150 கோடி மதிப்பீட்டில் 150 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். அவை 24 மணி நேரமும் இயங்கும் என கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
அரசு கல்லுாரிகளில் கண்காணிப்பு கேமராக்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.