Search This Blog
Thursday, March 12, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நண்பர்கள் கவனத்திற்கு அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் ரத்து என்று ஒரு அரசாணை தற்போது வாட்ஸ் அப் குழுக்களில் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களால் 1969 ஆம் ஆண்டு கொண்டுவந்த அரசாணை எண் 42 இன்னும் நடைமுறையில் உள்ளது. ஆகவே கல்வித்துறையில் உள்ள நாம் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை. அனைத்து துறைகளிலும் இருக்கக்கூடிய அமைச்சுப் பணியாளர்களுக்கு அட்வான்ஸ் இன்சென்டிவ் இன்கிரிமெண்ட் என்பது Department test ல் அக்கவுண்ட் டெஸ்ட் கான அட்வான்ஸ் இன்கிரிமெண்ட் கொடுக்கப்படுவது வழக்கம் அதுதான் ரத்து செய்யப்பட்டு இருக்குதே தவிர நாம் ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் எந்த சிக்கலும் இல்லை . ஆகவே மேற்கண்ட அரசாணை உங்களுக்கு பகிரப்பட்டால் குழப்பமடைய வேண்டாம். மேலும் மேற்கண்ட அரசாணையை நமது ஆசிரியர் நண்பர்கள் வேறு குழுக்களுக்கு பார்வர்ட் செய்து குழப்பம் விளைவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பதற்றம் வேண்டாம்
ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020.
பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்தாது.
அதில் இரண்டாம் பக்கம் பத்தி இரண்டில் மேற்கண்ட பார்வையில் உள்ள முதல் நான்கு அரசாணைகள் போன்று
வேளாண் துறை
மக்கள் நல்வாழ்வு துறை கல்வித்துறை
ஊரக வளர்ச்சித்துறை போன்றவற்றில் அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. அந்த அரசாணைகள் அத்துறையில் உள்ள அனைவருக்கும் பொருந்தாது ஒரு சில பிரிவுகளுக்கு பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது எனவே ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு தனி அரசாணையில் வழி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 37 உள்ள அரசாணைகளுக்கும் கல்வித்துறையில் வழங்கப்பட்டுவரும் ஊக்க ஊதிய அரசாணைக்கும் தொடர்பு இல்லை.
இவை அனைத்தும் ஆசிரியர்கள் தவிர பிற அரசு ஊழியர்கள் மற்றும் சார் நிலை அலுவலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
மேற்கண்ட அரசாணையின்படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் இளநிலை உதவியாளர், உதவியாளர் போன்ற அரசு ஊழியர்கள் துறைத் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பவானிசாகரில் உள்ள அரசு ஊழியர்கள் அடிப்படை பயிற்சி மையத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்கள் போன்றவர்களுக்காக Advance Increments இதுவரை வழங்கபட்டு வந்தது. இனி வருங்காலங்களில் இது போன்ற Advance increments வழங்கப்பட மாட்டாது என்று உத்தரவிட்டுள்ளது.
இந்த அரசாணையின்படி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் Increments பெறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை.
10.03.2020க்கு பின்னர் அனைத்து துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் ரத்து செய்யப்படுகிறது. எனினும் அரசாணை வெளியிடப்பட்ட தேதிக்கு முன்னர் உயர்கல்வி பெற்றுள்ள, ஆனால் ஊக்க ஊதியம் வழங்கப்படாத நபர்களுக்கு சம்பந்தப்பட்ட துறை தனியே ஆய்வுசெய்து நிதித்துறையின் இசைவினை பெற்ற பிறகு ஊக்க ஊதியத்தை அனுமதிக்கலாம்!!!. அரசாணை வெளியீடு.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
G.O
TEACHERS
ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020 - பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்துமா??
ஊக்க ஊதிய உயர்வு ரத்து அரசாணை 37 நாள் : 10.3.2020 - பள்ளிக் கல்வித்துறைக்கு பொருந்துமா??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.