👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகத்துக்கு, அரசு பள்ளி ஆசிரியர் சுகவனம் முருகன், 1.50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார்.
சென்னை, தரமணியில் உள்ளது, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம். ரோஜா முத்தையா என்ற அறிஞர், வாழ்நாள் முழுவதும் சேமித்த நுால்களை, இந்த நுாலகம் பாதுகாத்து வருகிறது.ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலக அறக்கட்டளை, இதை நிர்வகிக்கிறது. மேலும், வரலாற்று ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் துவக்கிய, சிந்து வெளி பண்பாட்டு மையம் என்ற, ஆய்வு மையமும் இங்கு செயல்படுகிறது.இந்த மையம், சிந்துவெளி எழுத்துக்கள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த நுாலகத்திற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், சவுளூரில் உள்ள, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கணித ஆசிரியராக பணியாற்றி வரும் சுகவனம் முருகன், 1.50 லட்சம் ரூபாய் நன்கொடை அளித்து உள்ளார்.இது குறித்து, ரோஜா முத்தையா நுாலகத்தின் இயக்குனர் சுந்தர் கூறியதாவது:அரசு பள்ளி ஆசிரியர் சுகவனம் முருகன், இரண்டு நாட்களுக்கு முன், ரோஜா முத்தையா நுாலகம் வந்தார். அவர், 1.50 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி, 'இந்த உதவியை, நுாலக வளர்ச்சி பணிக்கு பயன்படுத்துங்கள். வாய்ப்புக் கிடைக்கும் போது, மேலும் உதவுகிறேன்' என்றார்.
அவரை, நான் நேரில் சந்தித்ததில்லை. அவர் அளித்த இந்த தொகை, எங்களின் ஆய்வு மற்றும் நுாலகப் பணிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.இது குறித்து, சுகவனம் முருகன் கூறியதாவது:ஆசிரியர் பணிக்காக கிடைக்க வேண்டிய நிலுவை தொகை, தற்போது தான் கிடைத்தது. அதை, ஏதாவது நல்ல காரியத்துக்கு பயன்படுத்தலாம் என்று நினைத்தேன்.எனவே, இந்த நுாலகத்துக்கு நன்கொடையாக அளித்தேன். நுாலகத்தின் செயல்பாடுகளுக்கு, நாமும் சிறிய உதவி செய்ததில் மகிழ்ச்சியே. இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.