👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மின் கணக்கீட்டாளர் பணிக்கான, 'ஆன்லைன்' தேர்வை, தமிழில் நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:வீடு வீடாகச் சென்று, 'மீட்டர் ரீடிங்' எடுக்கும், கணக்கீட்டாளர் பணிக்கான தேர்வை, தமிழில் நடத்த மறுப்பது, கிராமப்புற இளைஞர்களின், எதிர்காலத்தை பாழ்படுத்தும், திட்டமிட்ட சதியோ என்ற, சந்தேகம் ஏற்படுகிறது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பில், 'இப்பணிக்கு விண்ணப்பிப்பவருக்கு கட்டாயம், தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்; தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத இடங்கள்' என்றெல்லாம், ஒப்புக்கு கூறிவிட்டு, 'ஆன்லைன் தேர்வு மட்டும், முழுக்க முழுக்க தமிழில் நடைபெறாது' என அறிவிப்பது, முற்றிலும் அநீதியானது.தவறான கேள்விகளுக்கு, 'நெகடிவ்' மதிப்பெண் வழங்கும் முறையும், கிராமப்புற இளைஞர்களை, அடியோடு புறக்கணிக்கும் செயல். எனவே, 'ஆன்லைன்' தேர்வை, முழுமையாக தமிழில் நடத்தும் வகையில், மின் துறை அமைச்சர் தங்கமணி, மறு அறிவிப்பு வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.