Breaking

Thursday, March 05, 2020

நாளை(மார்ச் 6) வேலை வாய்ப்பு முகாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னையில் வருகிற 6ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் (முழு கூடுதல் பொறுப்பு) விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், வாரம்தோறும் வெள்ளிக்கிழமை வேலைவாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து வரும் 6ம் தேதி (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை-32, கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2, ஐடிஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்து கொள்ளலாம். 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட பணிகாலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர் . வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog