👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளி வளாகத்தை, மாணவர்கள் சுத்தம் செய்த விவகாரத்தில், விளக்கம் அளிக்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி பஞ்சாயத்து தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை, தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யும்படி கூறியுள்ளார். சுத்தம் செய்வதற்கு, மாணவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கவசங்களும் வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் கைகளில் காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்கு பதிவு செய்ததை தொடர்ந்து, ஆணைய தலைவர் துரை ஜெயச்சந்திரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.அதில், 'இதுதொடர்பாக விசாரணை நடத்தி, இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.