👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புக்கு முன், மின் வாரியம், 5,000 'கேங்மேன்' பதவிக்கான எழுத்து தேர்வை நடத்தி, ஆட்களை தேர்வு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியத்தில், கள பிரிவில், 30 ஆயிரம் உட்பட, 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், கள பணிகளை மேற்கொள்ள, கேங்மேன் என்ற புதிய பதவியில், 5,000 ஊழியர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச கல்வி தகுதி, ஐந்தாம் வகுப்பு என, நிர்ணயிக்கப்பட்ட அந்த பதவிக்கு, இன்ஜினியரிங் பட்டதாரிகள் உட்பட, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்.உடல் தகுதி மற்றும் எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக, உடல் தகுதி தேர்வு, 2019 டிசம்பரில் நடந்தது. மொத்தம், 60 ஆயிரம் பேர் பங்கேற்றதில், 15 ஆயிரம் பேர், எழுத்து தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர். 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், டிசம்பர் இறுதியில் நடந்தது.
தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன், கேங்மேன் தேர்வு அறிவிக்கப்பட்டதால், திட்டமிட்டபடி, உடல் தகுதி தேர்வு நடந்தது.விரைவில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. அதற்கான அறிவிப்பு வெளியாகும் முன், கேங்மேன் பதவிக்கு எழுத்து தேர்வை நடத்தி, தகுதியான நபர்களை, மின் வாரியம், தேர்வு செய்யுமா என்ற எதிர்பார்ப்பு, தேர்வர்களிடம் எழுந்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.