சர்ச்சை
தமிழக அரசு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்நிலையில், வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், வரி வசூலிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, 2019 செப்டம்பரில் நடந்தது. இதன் முடிவுகள், நவம்பரில் வெளியாகின.
பெற்றோர், நேற்று முன்தினம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம், ஐந்து குழுவாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ஆறு மணி நேரத்துக்கும் மேலாக, இந்த விசாரணை நடந்தது. விசாரணை நேற்றும் தொடர்ந்தது.விடைத்தாள்தேர்வர்களுக்கு, குரூப் - 4 பாட திட்டத்தில் தயாரிக்கப்பட்ட, புதிய வினாத்தாளுடன், மாதிரி தேர்வும் நடத்தப் பட்டது. இந்த தேர்வின் விடைத்தாள்களுடன், தேர்வர்கள் ஏற்கனவே எழுதிய, குரூப் 4 தேர்வு விடைத்தாள்களின் விடைகளும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டுள்ளன. பொங்கல் விடுமுறைக்கு பின், இந்த பிரச்னையில் முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.