CLICK HERE TO READ MORE
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஓர்அறிய வாய்ப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 500 இளநிலை உதவியாளர் (கணக்கு) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்படுகின்றன.
நிறுவனம்: தமிழ்நாடு மின்சார வாரியம்
மொத்த காலியிடங்கள்: 500
பணி இடம்: தமிழ்நாடு முழுவதும்
பணி: Junior Assistant (Accounts ) - 500
சம்பளம்: மாதம் ரூ. 19,500 - ரூ.62,000
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: வணகவியல் பிரிவில் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்க்கள். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பின்னர் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பத்தாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வுக் கட்டணம்: பிசி, எம்பிசி பிரிவினர் ரூ.1000, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.500, அனைத்து பிரிவைச் சேர்ந்த விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.500 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
www.tangedco.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்
உதவி பொறியாளர், கணக்கீட்டாளர் உட்பட, 2,400 பதவிகளுக்கு, ஆட்களை நியமனம் செய்வதற்கான, தேர்வு அறிவிப்பை, தமிழக மின் வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில், கள உதவியாளர், பொறியாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலும், 50 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. இதனால், ஒருவரே பல வேலைகளை செய்வதால், ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.இதையடுத்து, உதவி பொறியாளர் பதவியில், எலக்ட்ரிகல் பிரிவில், 400; மெக்கானிக்கல் பிரிவில், 125; சிவில் பிரிவில், 75 என, 400 நபர்களை தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்பை, மின் வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது.
CLICK HERE TO READ MORE
மேலும், கணக்கீட்டாளர் பதவியில், 1,300; இளநிலை உதவியாளர் கணக்கு பதவியில், 500 ஊழியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது.அதில், உதவி பொறியாளர் பதவிக்கு, இன்ஜினியரிங் பட்டமும்; இளநிலை உதவியாளர் கணக்கு பதவிக்கு, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டமும்; கணக்கீட்டாளர் பதவிக்கு, பி.காம்., பாடமும் முடித்திருக்க வேண்டும். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, கடைசி நாள் உள்ளிட்ட அறிவிப்பாணை, மின் வாரிய இணையதளத்தில் உள்ளது.மூன்று ஆண்டுகளாக, மின் வாரியம், எழுத்து தேர்வு மட்டும் நடத்தி, அதில், அதிக மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு அடிப்படையில், வேலை வழங்கியது.
தற்போது, முதல் முறையாக, எழுத்து தேர்வை, கணினி வாயிலாக நடத்த உள்ளது. இதனால், முறைகேடு தடுக்கப்படும்; தேர்வு முடிவும் விரைவில் வெளியிடப்படும்
CLICK HERE TO READ MORE
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.