👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
போலி சான்றிதழ் கொடுத்த, அரசு பள்ளி ஆசிரியை, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
திருப்பத்துார் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், 2015ல் முருகம்மாள், 37, என்பவர், இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்தார். அவரது கல்வி சான்றிதழ், ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.இதில், பி.எஸ்சி., கணிதம், மற்றும் பி.எட்., படித்ததாக அவர் கொடுத்திருந்த சான்றிதழ் போலி என தெரிந்தது. இதையடுத்து, முருகம்மாளை, 'சஸ்பெண்ட்' செய்து, திருப்பத்துார் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை நேற்று உத்தரவிட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், ப.முத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இடைநிலை ஆசிரியை பணியில் சேர்ந்தவர் முருகம்மாள். இவர் பிஎஸ்சி கணிதம், பிஎட் படித்ததாக கூறி சான்றிதழை கொடுத்திருந்தார். இந்த சான்றிதழ்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. ஆய்வின்போது இவை போலி என்பதும், போலி சான்று தயாரிக்க பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் உட்பட சிலர் உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு புகார் அனுப்பினர். இந்த விசாரணை கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் முருகம்மாளை தற்காலிக பணிநீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார் அதன்பேரில் நேற்று முன்தினம் திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, முருகம்மாளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.