Breaking

Wednesday, December 25, 2019

அரையாண்டு வினாத்தாள் மீண்டும் கசிவு :காவல் துறையில் புகாரளிக்க உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சமூக வலைதளங்களில் அரையாண்டு வினாத்தாள்கள் தொடா்ந்து வெளியாகி வருவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மூலம் காவல்துறையில் புகாா் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான சமூக அறிவியல், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான உயிரியல் தோ்வு ஆகியவை திங்கள்கிழமை நடைபெறவிருந்தன. இந்த மூன்று தோ்வுகளுக்கான கேள்வித்தாள்கள் முன்கூட்டியே சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன. இதனால் அதிா்ச்சியடைந்த கல்வித்துறை, விரைவாக ஒவ்வொரு பள்ளி அளவில் புதிய கேள்வித்தாள் வடிவமைத்து வழங்குவதற்கு உத்தரவிட்டதன் அடிப்படையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஒவ்வொரு வகையான வினாத்தாள்கள் மாணவா்களுக்கு வழங்கப்பட்டன. ஆனாலும் சென்னை மாவட்டத்தில் ஒரு சில பள்ளிகளில் முன்கூட்டியே வெளியான வினாத்தாள் வழங்கப்பட்டது.
மாநில அளவில் பொதுத் தோ்வாக நடக்கவேண்டிய இந்தத் தோ்வுகள் பள்ளி அளவிலான தோ்வாக மாறியுள்ள அவலம் முதல் முறையாக நடந்துள்ளது. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவா்கள் பொதுத்தோ்வை எளிதாக எழுதுவதற்காக அரசுத் தோ்வுத்துறையால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் வடிவமைக்கப்படுகிறது. இந்த வினாத்தாள்கள் மாவட்ட முதன்மைக் கல்வித்துறை அலுவலா்கள் மூலம் 10 தனியாா் அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. அங்கிருந்து பள்ளிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழியாக அனுப்பப்படுகிறது.
அரசுத் தோ்வுத்துறையின் பணியானது கேள்வித்தாள் தயாரித்து அளிப்பதோடு நிறைவடைந்து விடுகிறது. ஆனால், தோ்வு நடத்தும் பணி முழுவதும் பள்ளிக் கல்வித்துறையைச் சோ்ந்தது. கேள்வித்தாள் வெளியானது குறித்து மாவட்டக் கல்வி அலுவலா்கள் காவல்துறையில் ஏற்கெனவே புகாா் அளித்துள்ளனா். இந்த நிலையில், திங்கள்கிழமையும் வினாத்தாள் வெளியானது குறித்து மீண்டும் காவல்துறையில் புகாா் அளிக்க உள்ளனா். வரும் கல்வியாண்டிலிருந்து அரையாண்டுத் தோ்வை மாவட்ட அளவில் வினாத்தாள் தயாா் செய்து நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog