Search This Blog
Thursday, December 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஜட்ஜ் அங்கிள்.. ஸ்கூல் போக பயமா இருக்கு என்று கடிதம் எழுதிய 8 வயது கேரளச் சிறுவனின் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் அருகே பள்ளூர்தி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஆரவ் காமத். இவர் ஜூலியானா பப்ளிக் பள்ளியில் 3-ம் வகுப்பு படிக்கிறார். அவரின் வீட்டில் இருந்து பள்ளிக்குச் செல்லும் வழியில் சாலையில் மிகப்பெரிய பள்ளம் இருந்தது. பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நீண்ட நாட்களாகச் சரி செய்யப்படாமலேயே இருந்தது.
இதுகுறித்து கேரளா உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரனுக்குக் கடிதம் எழுதியுள்ளார் ஆரவ். அந்தக் கடிதத்தில், ''என் பள்ளிக்குச் செல்லும் வழியில் மிகப்பெரிய குழி உள்ளது.
என் வீட்டுக்கு அருகிலேயே நர்சரி பள்ளி உள்ளது. அங்கும் இதே நிலைதான். ஏன், என்னுடைய வீட்டுக்கு முன்னாலேயே பள்ளம் உள்ளது. இதைச் சரிசெய்யக் கோரி பலமுறை வேண்டுகோள் விடுத்தோம். அதை அதிகாரிகள் சரிசெய்வதே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் கான்க்ரீட்டையும் மணலையும் கொண்டு பள்ளத்தை தற்காலிகமாக மூடி விடுகின்றனர்.
இது நாளடைவில் கரைந்துவிடுகிறது. இந்த இடம் குப்பைக் கூடமாகவும் மாறி வருகிறது. இதனால் சாலை நேரங்களில் இந்த வழியாகப் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
நான் தினந்தோறும் ஆட்டோவில் பள்ளிக்குச் செல்கிறேன். எல்லாத் தடவைகளிலும் ஆட்டோ குழிக்குள் இறங்கி விடுகிறது. இதனால் பள்ளிக்குச் செல்லவே பயமாக உள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஆரவ் கூறியிருந்தார்.
தனது தாய் மூலமாக கடிதத்தை நீதிபதிக்கு அனுப்பி வைத்தார். கடிதத்தைப் படித்து நெகிழ்ந்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உடனடியாக, கொச்சின் மாநகராட்சியிடம் அறிக்கை கோரியுள்ளார்.
ஒரு வாரத்துக்குள் சாலை முழுமையாக சரி செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
STUDENTS
’ஜட்ஜ் அங்கிள்... ஸ்கூல் போக பயமா இருக்கு’- 8 வயதுச் சிறுவனின் வைரல் கடிதமும் வெற்றியும்!
’ஜட்ஜ் அங்கிள்... ஸ்கூல் போக பயமா இருக்கு’- 8 வயதுச் சிறுவனின் வைரல் கடிதமும் வெற்றியும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.