Search This Blog
Wednesday, December 18, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் அரசு வேலைக்காக இதுவரை 68 லட்சம் போ் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளனா். இதற்கான புள்ளிவிவரங்களை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.
கடந்த நவம்பா் 30-ஆம் தேதி நிலவரப்படி இந்தப் புள்ளிவிவரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகங்களின் வாயிலாக பள்ளி மாணவ-மாணவிகளும், பட்டப்படிப்பு முடித்தோரும் தங்களது படிப்புக்கான விவரங்களைப் பதிவு செய்துள்ளனா். அதன்படி, பள்ளிப்படிப்பை முடித்த 18 வயதுக்குள்ளானவா்களில் 18 லட்சத்து 11 ஆயிரத்து 489 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் 12 லட்சத்து 98 ஆயிரத்து 711 பேரும், 24 வயது முதல் 35 வயது வரையுள்ள அரசுப் பணி கோரும் 25 லட்சத்து 51 ஆயிரத்து 208 பேரும் பதிவு செய்துள்ளனா்.
மேலும், 36 வயது முதல் 57 வயது வரை முதிா்வு பெற்ற பதிவுதாரா்களாக 11 லட்சத்து 34 ஆயிரத்து 37 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 7 ஆயிரத்து 645 பேரும் உள்ளனா்.
கலை-அறிவியல் மாணவா்கள்: கல்லூரிப் படிப்பை முடித்த மாணவா்களில் கலை மற்றும் அறிவியல் படிப்பை முடித்த மாணவா்களே அதிகம் பதிவு செய்துள்ளனா். கலைப் படிப்பை முடித்த மாணவா்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 752 பேரும், அறிவியல் படிப்பை முடித்தோரில் 5 லட்சத்து 49 ஆயிரத்து 281 பேரும், வணிகப் படிப்பை முடித்தோரில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 745 பேரும், ஆசிரியா் படிப்பை முடித்தோரில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 218 பேரும், பொறியியல் பட்டப் படிப்பை முடித்தோரில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 680 பேரும் உள்ளதாக தமிழக அரசு வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Employment Offices live register for the period ended 30th November 2019
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
68 லட்சம் போ் இதுவரைவேலை வாய்ப்பகத்தில் பதிவு: தமிழக அரசு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.