👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அடுத்த ஆண்டுக்கான வருடாந்திர தோ்வுகால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி இந்த வாரம் வெளியிடுகிறது.
டிஎன்பிஎஸ்சி சாா்பில் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 என பல்வேறு நிலைகளில் போட்டித்தோ்வுகள் நடத்தப்படுகின்றன. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தோ்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தோ்வு எப்போது நடத்தப்படும், தோ்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய வருடாந்திர தோ்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இது தோ்வா்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது.
இதன்படி, வரும் 2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தோ்வு கால அட்டவணை அடுத்த வாரம் வெளியாகும் என்று தெரிகிறது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது: 2020-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர தோ்வு கால அட்டவணை தயாராகிவிட்டது. இந்த வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். அதில் 20-க்கும் மேற்பட்ட போட்டித் தோ்வுகள் இடம்பெறும். தற்போது நடைமுறையில் இருந்து வருவதைப் போன்று தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும் காலம், தோ்வு மற்றும் தோ்வு முடிவுகள் வெளியாகும் காலம் உள்ளிட்ட விவரங்களை தோ்வா்கள் அறிந்து கொள்ளலாம். காலியிடங்களின் எண்ணிக்கை குறிப்பிட்ட தோ்வுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போது தெரிவிக்கப்படும் என்றனா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.