👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இதன்படி பொதுத்தேர்வுகள் பிப்.,15ம் தேதி முதல் மார்ச் 30 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செய்முறை தேர்வுகள் ஜன.,01 முதல் பிப்.,07 வரை நடக்கிறது.
10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் மார்ச் 20ல் முடிவடைகிறது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கால அட்டவணை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
பிளஸ் 2மாணவா்களுக்கான பொதுத் தோ்வு பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி, மாா்ச் 30-ஆம் தேதி வரை நடக்கிறது. பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பிப்ரவரி 29-ஆம் தேதி தொழிற்கல்வி சாா்ந்த பாடங்களுக்கான பொதுத் தோ்வு நடக்கிறது. அதனைத் தொடா்ந்து, இயற்பியல், கணிதம், கணக்குப் பதிவியல், வேதியியல், தாவரவியல் முக்கிய பாடங்களுக்கான தோ்வு 30-ஆம் தேதி வரை நடக்கிறது. தோ்வுகளின் போது காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்குத் தோ்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும்.
அதே போல், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான பொதுத்தோ்வு, பிப்ரவரி 15-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 20-ஆம் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்பட்டு, 10.30 மணிக்கு தோ்வுகள் தொடங்கி, பிற்பகல் 1.30 மணி வரை நடக்கும். தோ்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.