சென்னை பல்கலைக்கு இரண்டு வாரம் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 18, 2019

Comments:0

சென்னை பல்கலைக்கு இரண்டு வாரம் விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பல்கலை மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், டிச.,23 வரை விடுமுறை விடப்படுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு டிச.,24 முதல் ஜன.,01 வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜன.,02ம் தேதி பல்கலை திறக்கப்படுகிறது. விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நடக்கவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அது குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,கள் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம் காரணமாக சென்னை பல்கலைக்கு 15 நாட்கள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.மத்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சென்னை பல்கலையை சேர்ந்த மாணவர்களும் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர். துணைவேந்தர் அலுவலகம் முன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு மாணவர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் போராட்டம் மேலும் வலுப்பெற்றது. இதன் காரணமாக போலீசாரின் ஆலோசனைப்படி பல்கலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை அறிவித்து பதிவாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அனைத்து துறை தலைவர்கள் மற்றும் சென்னை பல்கலையின் வளாக இயக்குனர்களுக்கு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து 'இ - மெயில்' அனுப்பப் பட்டுள்ளது.அதில் 'டிச. 24ம் தேதி முதல் கிறிஸ்துமஸ் விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப் பட்டுள்ளது. இடைப்பட்ட நாட்களான 23ம் தேதி வரையிலும் மாணவர்கள் பல்கலைக்கு வர வேண்டாம்' என அறிவுறுத்தப் பட்டுள்ளது.இந்த அறிவிப்பால் இன்று முதல் ஜனவரி 1ம் தேதி வரை சென்னை பல்கலைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாட்களில் அலுவலகம் இயங்கும். பல்கலையின் நிர்வாக பணிகள் நடக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews