One Day SMC & SMDC Training for Team Members - SPD Proceedings Published! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 21, 2019

Comments:0

One Day SMC & SMDC Training for Team Members - SPD Proceedings Published!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
SMC மற்றும் SMDC உறுப்பினர்களுக்கு பயிற்சி வட்டார அளவில் (பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில்) 24.1.2020ல் நடைபெறும். CLICK HERE TO DOWNLOAD - SPD PROCEEDINGS... ஒருங்கிணைந்த கல்வி , அரசாணை நிலை எண் - 42 , பக ( 1 ) துறை நாள் : 06 . 03 . 2019 - ன் படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் , பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு ( SMCISMDC ) அமைக்கப்பட்டுள்ளது .
இக்குழு பள்ளி வளர்ச்சிக்கும் , சமுதாயத்திற்கும் நல்ல ஒரு பாலமாக விளங்குகிறது . இக்குழுவின் செயல்பாடுகள் பள்ளியின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிவதுடன் கல்வி நிர்வாகம் செம்மையாகச் செயல்பட உதவுகிறது . அனைத்து பள்ளி வயதுக் குழந்தைகளையும் ( 6 - 14 ) பள்ளியில் சேர்த்தல் , பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் , மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் சமூக ஆண் , பெண் இன வேறுபாட்டினால் மாணவர்களின் கற்றல் அடைவுகளில் ஏற்படும் இடைவெளியை முற்றிலும் களைதல் என அனைத்திலும் முனைப்புடன் செயல்பட்டு ஒவ்வொரு பள்ளியையும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கனைக் கொண்ட பள்ளிகளாக மாற்றுவதற்கான நோக்கோடு பள்ளி வளர்ச்சித் திட்டம் தயாரித்தல் மற்றும் தயாரித்த பள்ளி வளர்ச்சித் திட்டம் பற்றிய விவரங்களை அந்தந்த வட்டார வளமைய அளவில் பராமரித்தல் எனப் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி மிகவும் இன்றியமையாததாக உள்ளது . இதனைக் கருத்தில் கொண்டு மத்திய திட்டக் குழுவின் அறிவுறுத்தலின் படி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு நாள் பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .
பயிற்சியின் நோக்கங்கள் : * அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 - ன் சிறப்பு அம்சங்களை எடுத்துரைத்தல் . * குழந்தையின் உரிமைகள் ( Child Rights ) * பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களின் பணிகளை அறியச் செய்தல் . * பாலினப் பாகுபாடு * பேரிடர் மேலாண்மை * தரமான கல்வி * கற்றல் விளைவுகள் * உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் * பள்ளி மேலாண்மைக் குழு - பள்ளி நிதியைப் பயன்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் * சமூகத் தணிக்கை , * தூய்மைப் பள்ளி மற்றும் நடத்தை மாற்றம் & கற்றலில் புதுமைகள்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews