👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புத்தக பிரியர்களுக்கு, புத்தாண்டன்று சிறப்பு சலுகை வழங்க, புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டின் கடைசி மற்றும் புத்தாண்டின் துவக்க நாளிலும், உணவகங்கள், ஜவுளி கடைகள், பர்னிச்சர்கள், வீட்டு உபயோகப் பொருள் விற்பனையகங்களில், சலுகைகள் வழங்கப்படுவது உண்டு.அத்துடன், வாடிக்கையாளர்களை கவர்ந்து, தக்க வைத்துக் கொள்ள, இனிப்பு, காலண்டர், டைரி உள்ளிட்ட பரிசுப்பொருட்களையும் வழங்குவதுண்டு.
ஆனால், புத்தக பிரியர்கள், பெரும்பாலும் புத்தகங்களை நேசிப்பவர்களாகவும், ஆடம்பர செலவுகளை குறைப்பவர்களாகவும் இருப்பர். அவர்களுக்கு, இது போன்ற சலுகைகள் ஏதும் கிடைப்பதில்லை.அவர்களின் ஏக்கத்தைப் போக்கும் வகையில், 'பபாசி' என்ற, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், இந்த புத்தாண்டில், புத்தக பிரியர்களுக்கு சலுகைகள் வழங்க முன்வந்துள்ளது.
இது குறித்து, பபாசியின் தலைவர் சண்முகம் கூறியதாவது:புத்தாண்டில் பலர், புதுப் புத்தகங்களை வாங்க ஆர்வமாக உள்ளதையும், பலர் புத்தாண்டுக்கு புத்தகங்களை பரிசளிக்க இருப்பதாகவும் தெரிவித்தனர்.
அவர்களின் ஆசையை நிறைவேற்றும் வகையில், தமிழகத்தில் உள்ள, முக்கிய புத்தக கடைகளை, டிச., 31 இரவு, 1:00 மணி வரை, திறந்து வைக்க உள்ளோம். அத்துடன், 10 முதல், 25 சதவீதம் வரை சலுகையும் வழங்கப்பட உள்ளது.புத்தக பிரியர்கள், தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள புத்தகக் கடை பற்றிய விபரம் அறிய, 94440 81510, 94449 60935 ஆகிய, மொபைல் போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.