Search This Blog
Thursday, December 05, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'இஸ்கான்' அமைப்பில் சேர ஆர்வமுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்,'' என்று மதுரை திருப்பாலை இஸ்கான் கோயில் மேலாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னை மாணவர்களின் ஒழுக்கமின்மை, மரியாதையற்ற தன்மை ஆகும். மாணவர்கள் நற்குணங்களை தங்கள் கல்வியால் பெறவில்லை என்றால், அந்த கல்வியால் யாருக்கும் பயன் இல்லை. அத்தகைய கல்வி சமுதாயத்திற்கு ஆபத்தையே கொடுக்கும். நல்லொழுக்கம் போதிக்கும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை பள்ளிகளில் நடத்த இஸ்கான் தயாராக உள்ளது.
இளைஞர் பலர் வாழ்வில் செய்வதறியாது வாழ்கின்றனர். அவர்களுக்கு இஸ்கான் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. வாழ்வின் இலக்காகிய மோட்சத்தை (கடவுள் யோகம்) அடைய இயலவில்லை. எனவே நாம் இப்பிறவியையாவது சரியாக பயன்படுத்த வேண்டும். இஸ்கான் கோயிலில் மூன்று மாத சிறப்பு இலவச பயிற்சி அளித்து வேலையும் தரப்படும். விருப்பம் உள்ளோர் தங்களை பற்றிய சுய குறிப்பை 96779 14980 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும். தங்குமிடம், உணவு இலவசம். மூன்று மாத பயிற்சி காலம் முழுவதும் தங்கி இருக்க வேண்டும்.
பூஜை, சமையல், யாகம், மந்திரம், உச்சரித்தல், கோயில் பராமரிப்பு, உபன்யாசம், கம்ப்யூட்டர், கார் ஓட்டுதல், சமஸ்கிருதம், ஆங்கிலம், விவசாயம், பசு பராமரிப்பு என பல்வேறு துறைகளில் இலவச பயிற்சி அளிக்கப்படும்.
18 - 25 வயதுள்ளோர் இணையலாம். கல்வி, மொழி, இனம், மதம், ஜாதி என பாகுபாடு இல்லை. ஆன்மிகம், தேசப்பற்று மேம்பாடு, சமூக சேவையில் ஆர்வம் உள்ளோர் விண்ணப்பிக்கலாம், என தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னை: 'இஸ்கான்' அமைப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.