சமூக மாற்றங்களின் ஏஜென்ட்களாக பல்கலைகள் செயல்பட வேண்டும்: ஜனாதிபதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, December 09, 2019

Comments:0

சமூக மாற்றங்களின் ஏஜென்ட்களாக பல்கலைகள் செயல்பட வேண்டும்: ஜனாதிபதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புவனேஸ்வர்: &'&'சமூக மாற்றங்களின், &'ஏஜென்ட்&'களாக, பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்,&'&' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார்.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தின், 75ம் ஆண்டு விழா, நேற்று நடந்தது.இதில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:கல்வி நிறுவனங்கள் அனைத்தும், மஹாத்மா காந்தியின் முக்கிய கொள்கையான அஹிம்சையை, மாணவர்களிடம் பரப்ப வேண்டும். மாணவர்கள் மனதில், வன்முறைக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்த வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை, அதிகாரமிக்கவர்களாக மாற்றும் பணியில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் பங்கு உள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரத்தை செயல்படுத்துவதில், கல்வி முக்கியமான கருவியாக உள்ளது.இந்த பணியை, உத்கல் போன்ற பல்கலைகள் மேற்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்துக்கான ஏஜென்ட்களாக பல்கலைகள் செயல்பட வேண்டும். ஒருவர், என்ன படித்தாலும், அறிவாளியாக முடியாது. தான் படித்ததை, நடைமுறையில் செயல்படுத்துபவர் தான் உண்மையான அறிவாளி.
அதனால் படித்ததை, வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார்.உலகத் தரத்தில் இல்லைவெங்கையா வேதனை மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள சிம்பயோசிஸ் சர்வதேச பல்கலையின், 16ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:சர்வதேச தரம் வாய்ந்த, முதல், 300 பல்கலைக்கழங்களில், இந்திய பல்கலை ஒன்று கூட இடம் பெறாதது பெருத்த வேதனை. இதை மாற்ற வேண்டும்.நாட்டில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டிய அவசியத்தில் நாம் உள்ளோம்.முதல், 100 இடங்களில், இந்திய பல்கலைகளை இடம் பெற வைக்க வேண்டும். அதன் பின், 50 இடங்களுக்குள் இடம் பெற வேண்டும்.
அறிவு, ஆராய்ச்சி, கலாசாரம், பண்பாடு என, அனைத்திலும், உலகின் குருவாக பாரதம் இருந்தது. ஆனால், இன்று நாம் தாழ்ந்துவிட்டோம். உலகின் குருவாக, பாரதத்தை மீண்டும் மாற்ற வேண்டியது, நம் கடமை. அதற்கு, பல்கலைக்கழகங்களில், கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும். வெளிநாடுகளில், பல பல்கலைகளில், பேராசிரியர்களின் திறமையை, சக பேராசிரியர்களும், மாணவர்களும் மதிப்பிடுகின்றனர். அதேபோன்ற ஒரு முறையை, இங்கும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews