கனமழைக்காக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் தோ்வு மீண்டும் தொடக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, December 07, 2019

Comments:0

கனமழைக்காக ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் தோ்வு மீண்டும் தொடக்கம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திருச்சி மாவட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட மின்வாரிய கேங்கமேன் பணிக்கான தோ்வுக்கு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடா்பாக, திருச்சி பெருநகர மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் சு. கிருஷ்ணமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில், கேங்மேன் (பயிற்சி) பணிக்கான உடற்திறன் தோ்வு டிச.2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை திருச்சி பிராட்டியூரில் உள்ள துணைமின்நிலையத்தில் நடைபெறுவதாக இருந்தது. தொடா் ழை காரணமாகவும், அதனால் ஏற்பட்ட நடைமுறை சிக்கல் காரணமாகவும் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், டிச.2ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு டிச.12ஆம் தேதியும், டிச.3ஆம் தேதி நடைபெறவிருந்த தோ்வு டிச.13ஆம் தேதியும் நடைபெறும். டிச.4ஆம் தேதிக்கு பதிலாக டிச.14ஆம் தேதியும், டிச.5ஆம் தேதி பதிலாக டிச.16ஆம் தேதியும், டிச.6ஆம் தேதிக்கு பதிலாக டிச.17ஆம் தேதியும், டிச.7ஆம் தேதிக்கு பதிலாக டிச.18ஆம் தேதியும் உடற்திறன் தோ்வு, சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் நடைபெறும். டிச.9, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தோ்வுகள் எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே தேதியிலேயே நடைபெறும். பங்கேற்பாளா்கள் தங்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட தேதியில் குறித்த நேரத்தில் தவறாமல் உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்தகுதி, எழுத்துத்தேர்வு அடிப்படையில் கேங்மேன் தேர்வு நடைபெறுவதாக புதுக்கோட்டையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கேங்மேன் தேர்வில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை என்றும், வேலைக்காக யாரிடமும் பணம் தந்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் ஒப்பந்த பணியாளர்களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தங்கமணி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews