👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு பள்ளிகளில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை - 1 பதவிக்கான, 2,144 காலியிடங்களை நிரப்ப, செப்., 27 முதல், 29 வரை போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 1:2 என்ற விகிதத்தில், சான்றிதழ் சரிபார்க்க முடிவானது. இதற்காக, அக்., 29 முதல், நவ.,1 வரை, தேர்வர்களால் அசல் சான்றிதழ்கள், ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
இதில், ஜாதி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட விபரங்கள், தொழில்நுட்ப காரணங்களால் பதிவாகவில்லை. எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள், தங்களின் ஜாதி சான்றிதழை, நாளை மாலை, 6:00 மணிக்குள், மீண்டும் ஒரு முறை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்து, தேர்வர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., - மின்னஞ்சலும் அனுப்பப் பட்டுள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
2144 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை வெளியிடப்பட்டு 27.09.2019 முதல் 29.09.2019 வரையில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டு காலிப்பணியிடங்கக்கு ஏற்ப 1:2 என்ற விகிதத்தில் சான்றிதழ் சரிபார்க்க நாடுநர்கள் அழைக்கப்பட்டு அவர்களின் சான்றுகள் ஆசிரியர் தேர்வு இணையதளத்தில் 29.10.2019 முதல் 1.11.2019 முடிய பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.