Search This Blog
Saturday, November 23, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவிகளின் கைத்தறி தொடர்பான கண்டுபிடிப்பு ஒன்று மண்டல அளவில் விஐடி பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய “நாளைய விஞ்ஞானி” போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
தனிச்சிறப்பு வாய்ந்த சின்னாளப்பட்டி கைத்தறி பட்டுப் புடவைகளில் காணப்படும் “புட்டா” எனப்படும் ஒருவகை டிசைன் பலராலும் விரும்பப்படுவது. அந்த புட்டா டிசைனை கைத்தறி இயந்திரத்திலேயே வடிவமைக்க முடியாது. இயந்திரத்தில் நெய்யும் போது நெய்யும் நூலை கையில் எடுத்து பட்டு நூலால் புட்டா வடிவத்தை போட வேண்டும். இதனால் கைத்தறி நெசவாளர்களுக்கு அதிக நேரமாகும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிரத்தை எடுத்து அந்தப் புடவையை நெய்து முடித்தாலும் எதிர்பார்க்கும் அளவுக்கு அதற்கான விலை கிடைப்பதில்லை என்கின்றனர் நெசவாளர்கள்.
இந்த நிலையில், சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவிகளான சுஜா, திவ்யதர்ஷிணி, சரயுதேவி, சக்திஐஸ்வர்யா, தர்ஷிணி ஸ்ரீ ஆகியோர் இணைந்து புட்டா டிசைனை இயந்திரம் மூலமே வடிவமைக்க புதிய நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். விஐடி பல்கலைகழகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற நாளைய விஞ்ஞானி போட்டியில் 10 ஆய்வுகள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் ஒன்றாகத்தான் சின்னாளப்பட்டி சேரன் வித்யாலயா பள்ளி மாணவிகளின் கண்டுபிடிப்பும் இடம்பெற்றுள்ளது.
தறி இயந்திரத்தில் குறுக்கு இழைகளை எடுத்துச் செல்லும் கருவிக்கு ஷட்டில் பாக்ஸ் என்று பெயர். தறி இயந்திரங்களில் பொதுவாக ஒரு ஷட்டில் பாக்ஸ் மட்டுமே இருக்கும். ஆனால் மாணவிகள் புட்டாவைப் பொருத்த கூடுதலாக ஒரு ஷட்டில் பாக்ஸை பொருத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
தங்களது இந்தக் கண்டுபிடிப்பின் மூலம் புடவை நெய்யும்போது நேர விரயம் பெருமளவு குறையும் என்றும் உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு என்றும் மாணவிகள் கூறுகின்றனர். பள்ளியின் ஆசிரியை பாண்டிச்செல்வியின் வழிகாட்டுதல்படியே இந்த நுட்பத்தை கண்டுபிடித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
மாணவிகளின் இந்தக் கண்டுப்டிப்பைப் பாராட்டி மெடல்கள், சான்றிதழ்கள், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசுகளை இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரையிடம் இருந்து மாணவிகள் பெற்றுள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளி மாணவிகள் கண்டுபிடித்த.. பட்டு நெசவுக்கான புதிய நுட்பம்..!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.