Breaking

Tuesday, November 26, 2019

மாதம் ஒரு முறை மாணவர்கள் கழிவறையை தூய்மை செய்யும் பொறுப்பு தலைமையாசிரியர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தில் பாவேந்தர் பாரதிதாசன் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் LKG முதல் 5-ம் வகுப்பு வரை 490 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். 16 ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியின் கழிவறை நட்சத்திர விடுதியில் உள்ளதைபோல் தூய்மையாக காணப்படுகிறது. நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து 'தூய்மைப் பள்ளி' என்ற விருதை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை வழங்குகிறது.
கடந்தாண்டு 100 சத புள்ளி பெற்று முதலிடம் பிடித்து இப்பள்ளியானது தூய்மைப் பள்ளிக்கான தேசிய விருதை பெற்றது. இதற்கு முக்கியக்காரணம் தூய்மையான கழிவறை. இங்குள்ள கழிவறை தூய்மையை இக்குழந்தைகள் உறுதி செய்வார்கள். இதற்கிடையே, ஆரம்ப காலத்தில் இப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற சசிக்குமார் என்ற ஆசிரியர், பணியாளர்கள் பராமரித்தாலும் மாதம் ஒரு முறை இக்கழிவறையை தூய்மை செய்து பராமரித்து வருகிறார். இவர் இப்பள்ளி பொறுப்பு தலைமையாசிரியராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்துக்கு ஒரு முறை பள்ளியில் உள்ள குழந்தைகள் கழிவறையை முற்றிலும் தூய்மை செய்கிறார். இதனால் கழிவறை தூய்மையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் பள்ளி குழந்தைகளுக்கும் ஏற்படுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog