👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக பாரம்பரிய கலைகள் பெரும்பாலும் விவசாய தொழிலை சார்ந்தே இருக்கிறது. குறிப்பாக, கோவை பகுதியில் வள்ளி கும்மி ஆட்டம், திருச்சி பகுதியில் சாட்டைக்குச்சி நடனம், மதுரையில் கரகம் பிரபலமாக உள்ளது. திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் அறிமுகப்படுத்திய சாட்டைக்குச்சி நடனம், ஏர் உழவு செய்யும்போதும், மாடுகளை வண்டிகளில் கட்டி, அழைத்துச்செல்லும்போதும், மாடு மேய்க்கும்போதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாட்டைக்குச்சி நடனம், உடலின் அனைத்து பாகங்களையும் வலிமை பெறச்செய்யும் அற்புத கலை ஆகும். மேற்கத்திய தாக்கம் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த நடனம் மெல்ல மறைந்து போனது. இதை மீட்டெடுக்கும் முயற்சியாக, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு பள்ளி ஆசிரியை சுகுணாதேவி, இந்த நடனத்தை மாணவிகளுக்கு கற்றுக்கொடுத்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பணியை செய்து வருகிறார்.
இந்த கிராமிய கலையை கற்றுக்கொள்வது மாணவிகளுக்கு ஒரு புதிய அனுபவமாக உள்ளது. இதுபோன்ற நடனம் மூலமாக தங்களுடைய உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் கிடைப்பதாகவும் மாணவிகள் கூறுகின்றனர். இதுபற்றி ஆசிரியை சுகுணாதேவி கூறுகையில், ‘கிராமிய கலைகளை பொறுத்தவரை தமிழர்களின் வாழ்வியல் முறையாக வடிவமைத்திருக்கிறார்கள். பண்டைய தமிழர்களின் எந்த நாட்டுப்புற கலைகளாக இருந்தாலும் சரி, அது உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் வலிமை சேர்க்கக்கூடிய அசைவுகளை கொண்டிருக்கும். இதுபோன்ற நடனங்களை பள்ளிப் பருவத்தில் மாணவர்கள் கற்றுக்கொள்ளும்போது உடல் வலிமை மற்றும் மன உறுதியை பெற முடியும். இதுபோன்ற நடனங்களை மாணவிகள் ஆர்வமுடன் கற்கும்போது, அழிந்துபோன கலைகளை மீட்டெடுக்க முடியும்’’ என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.