பள்ளி உங்கள் வீடு;'அரசு நிதியை வீணாக்காதீர்கள்' அமைச்சர் அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 28, 2019

Comments:0

பள்ளி உங்கள் வீடு;'அரசு நிதியை வீணாக்காதீர்கள்' அமைச்சர் அறிவுரை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பள்ளி உங்கள் வீடு; மாணவர்கள் உங்கள் பிள்ளைகள் என நினைத்து செயல்படுங்கள். அரசு பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை சரியாக பராமரிக்காமல், அரசு நிதியை வீணாக்காதீர்கள்,'' என, பள்ளி கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தினார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி அளிக்கும் புத்தகம் வெளியீட்டு நிகழ்ச்சி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு அரங்கில், நேற்று நடந்தது. புத்தகத்தை வெளியிட்டு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:ஐந்து மாணவர்கள் கூட இல்லாத பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லி தருகின்றனர். அவர்களின் சம்பளத்துக்கு மட்டும், ஆண்டுக்கு, 10 லட்ச ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இவ்வளவு செலவு செய்யும்போது, மாணவர்களை கூடுதலாக சேர்க்க, ஆசிரியர்கள் ஏன் முயற்சிக்கவில்லை? கிராமப்புற மாணவர்களுக்கும், கட்டணமில்லாத, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தமிழக அரசு, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, நலத்திட்டங்களை செய்கிறது.
பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துகிறது; கம்ப்யூட்டர் வாங்கப்படுகிறது; 'ஸ்மார்ட்' வகுப்பு நடத்தப்படுகிறது; சீருடை, புத்தகம் என, 14 வகை இலவசங்கள் வழங்கப்படுகின்றன; பல கோடி ரூபாய் செலவிட்டு, ஆசிரியர்களை அரசு பணியமர்த்துகிறது. அலட்சியம் வேண்டாம்!அரசின் நல்ல எண்ணங்களையும், திட்டங்களையும், அதிகாரிகளும், ஆசிரியர்களும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். பல இடங்களில், ஸ்மார்ட் வகுப்புக்கு சரியான வகுப்பறையும், இணையதள வசதியும் ஏற்பாடு செய்யப் படவில்லை. எல்.கே.ஜி., - யு.கே.ஜி., துவங்க, அதிகாரிகளின் முயற்சிக்க வேண்டும். பயன்படாத பழைய பாட புத்தகங்கள் பள்ளி களில் தேங்கி கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தாமல், ஆசிரியர்கள் அலட்சியமாக உள்ளனர். இந்த நிலை இருக்க கூடாது. அவற்றை, விதிகளை பின்பற்றி, தமிழக காகித தொழில் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். வீணாக்காதீங்கள்!நாற்காலிகள், மேஜை, பெஞ்ச் போன்றவற்றில், ஒரு காலில் சிறிய சேதமாகி இருந்தாலும், அவற்றை பழுது பார்க்காமல், ஓட்டை, உடைசல் என்று கூறி, ஓர் இடத்தில் குவித்து வைக்கும் நிலை உள்ளது. நம் வீட்டில் அப்படி இருந்தால் விட்டு விடுவோமா? அவற்றை பழுது பார்த்து பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தாலே, அரசுக்கு, ஆண்டுக்கு, 20 கோடி ரூபாய்க்கு மேல் செலவு குறையும்.பழைய கட்டடம்பள்ளி வளாகங்களில் பயன்படுத்த முடியாத கட்டடங்கள் இருந்தால், அவற்றை உடனடியாக இடித்து, அப்புறப்படுத்த வேண்டும். இடிந்த நிலையில் கட்டடத்தை வைத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சிதிலமான கட்டடங்களை இடித்தால், அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டலாம். அதற்கு, சமூக அமைப்புகள், முக்கிய பிரமுகர்களிடம் உதவி பெறுங்கள்.கல்விக்காக அரசு செலவிடும் நிதியை, தயவு செய்து வீணாக்காதீர்கள். பள்ளிகளை உங்கள் வீடு போன்றும், மாணவர்களை உங்கள் பிள்ளைகள் போன்றும் நினைத்து செயலாற்றுங்கள்.பள்ளி கல்வி செயலரும், பள்ளி கல்வி கமிஷனரும், விரைவில் கிராமங்கள்தோறும், பள்ளிகளை ஆய்வு செய்ய வர உள்ளனர். அப்போது, சரியாக நிர்வகிக்காத பள்ளிகளின் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகளின் பட்டியல் தயாரித்து, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.
பள்ளி பராமரிப்பு என்ற பெயரில் 5 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு ஆண்டுக்கு 10 லட்சம் செலவாவதை தடுக்க பள்ளிகளை கணக்கெடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் நடந்தது. இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் பங்ேகற்றனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளிப்பதற்கான பயிற்சி புத்தகத்தை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டு பேசியதாவது: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக 5 ஆண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்கள் எண்ணிக்கை என்னவாக இருந்தது என்பதை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்க வேண்டும். 5க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் விவரங்களை கண்டறிந்து தெரிவிக்க வேண்டும். அந்த பள்ளிகளில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் ஆண்டுக்கு ₹10 லட்சம் வரை செலவாகிறது. பள்ளியின் பராமரிப்பு செலவும் அதிகமாகிறது. அதனால் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிகளில் உள்ள பழைய புத்தகங்கள், பயன்படுத்தாத புத்தகங்களை வெளியில் கடைகளில் போடுவதை விட தமிழ்நாடு காகித தாள் உற்பத்தி நிறுவனத்துக்கு அளிக்கலாம்.
உடைந்து போன பொருட்கள், நாற்காலி,மேசை, உள்ளிட்டவைகளை சரிசெய்து பயன்படுத்த வேண்டும். பழுதான கணினிகளை சரிசெய்து பயன்படுத்துங்கள். இதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்க நிதியை பயன்படுத்துங்கள். மாணவர்களுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதை அதிகரிக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். அதற்கு அவர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி அளிக்க வேண்டும். பள்ளி தொடங்குவதற்கு முன்னதாக 15 நிமிடம் இசை, ஓவியம், நடனப் பயிற்சி அளிக்கவும், மாலை நேரத்தில் உடற்பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்கள் உதவி திட்டத்தின் கீழ் இதுவரை 125 கோடி நிதி வந்துள்ளது. ஒவ்வொரு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரும் மாதத்துக்கு 20 பள்ளிகளையும், மாவட்ட கல்வி அலுவலர்கள் 30 பள்ளிகளையும் , வட்டாரக் கல்வி அலுவலர்கள் 60 பள்ளிகளையும் தங்கள் வாகனங்களில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வுப் பணிக்கு செல்லும் போது ஆசிரியர்களை அழைத்து செல்லக் கூடாது. இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டம் செய்தால் டிஸ்மிஸ் * கிராமப் பகுதிகளை சேர்ந்த பள்ளிகளுக்கும் இணைய வசதி சென்று சேரும் வகையில் தொழில் நுட்பதுறையின் சார்பில் ₹2400 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. வரும் பிப்ரவரிக்குள் பணிகள் முடியும்.
* ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் தனக்கு விரும்பிய இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தலைமை ஆசிரியர்கள் தரையில் விழுந்து புரண்டு அழுகிறார். இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட வேலையை விட்டு நீக்குங்கள்.
* புதியதாக தொடங்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு விரைவில் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.
* தற்போது மாணவர்களின் கற்றல் திறனில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. அடுத்த ஆண்டில் முதலிடத்தில் வருவதற்கான முயற்சிகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்விஅமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews