Search This Blog
Thursday, November 07, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
8,888 காவலர்களை தேர்ந்தெடுப்பதற்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் 15 ைமயங்களில் ஐஜிக்கள் தலைமையில் உடல் தகுதி தேர்வு நடந்து வருகிறது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்கள் மற்றும் 62 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 8,888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிட்டது. 10ம் வகுப்பு தேர்ச்சிதான் கல்வி தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டிப்போட்டு கொண்டு மாநிலம் முழுவதும் சுமார் 3.22 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி சென்னையில் 13 மையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மைங்களில் நடந்தது.
இந்நிலையில் எழுத்து ேதர்வுக்கான முடிவுகள் சீருடைப்பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இணையதளத்தில் செப்டம்பர் 26ம் தேதி வெளியிட்டது. இதில் மொத்தம் 46,700 பேர் தேர்ச்சி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக நேற்று முதல் 3 நாட்களுக்கு உடற்கூறு அளத்தல் மற்றும் நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிர் ஏறுதல் என உடற்தகுதி தேர்வு நடக்கிறது.இதற்காக தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஐஜிக்கள் தலைமையில் 1:5 விகிதத்தில் உடற்திறன் போட்டி நடந்து வருகிறது. சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் தலைமையில் நடந்து வருகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அடுத்தகட்டமாக அசல் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும். அதைதொடர்ந்து பணி நியமன ஆணை வழங்கப்படும்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.
மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்க ஆயிரத்து 212 பெண்கள் உள்பட 3 ஆயிரத்து 742 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடல் தகுதித் தேர்வும் அனைத்தும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்படுகிறது. நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர் உடல் தகுதி தேர்வை நேரில் பார்வையிட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
EXAMS
JOB
PET
தமிழகம் முழுவதும் 15 மையங்களில் 8,888 பேரை தேர்ந்தெடுக்க காவலர் உடல் தகுதி தேர்வு
தமிழகம் முழுவதும் 15 மையங்களில் 8,888 பேரை தேர்ந்தெடுக்க காவலர் உடல் தகுதி தேர்வு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.