அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சீருடை பெற்றுத்தந்த ஆசிரியை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 16, 2019

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு சீருடை பெற்றுத்தந்த ஆசிரியை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அன்பு முகநூல் தோழர்களே........உங்களுக்கு நன்றி மட்டும் சொல்லி விட முடியுமா?இல்லை..இல்லவே இல்லை.. முடியவே முடியாது.... எவ்வளவு பெரிய உதவிகளையும் செய்த அடுத்த கணமே மறந்து விடும் இக்காலத்தில் என்றும் தங்களை மறவேன்........ என்றும் பள்ளி குழந்தைகளின் வாழ்த்துகள் மகிழ்ச்சியும் தங்களை வளம் பெறச்செய்யும்.... நிறைவேறாத சின்ன சின்ன ஆசைகள் என் மனதில்... குழந்தைகளின் மழலையை ரசிக்க வேண்டும்... அவர்கள் மகிழ்வுடன் பள்ளிக்கு வருதல் வேண்டும்..
அரசுப்பள்ளி குழந்தைகளின் அறிவுத்திறனை உலகறியச்செய்ய வேண்டும்... சுட்டி டிவியில் வரும் டோரா வின் கண்கள் அதில் தெரியும் சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் நேரில் பார்த்து ரசிக்க வேண்டும்.... குழந்தைகளுக்கு மெட்ரிக் பள்ளிகளைப்போல வாரம் ஒரு நாள் சிறப்பு சீருடை போட்டால் எப்படி இருக்கும் என்று சின்ன ஆசைபட்டேன்...செப்டம்பர் மாதம் எண்ணி 15 நாளில் ரூ 1,50,000 அனுப்பி என்னை மகிழ்ச்சி கடலில் திளைக்கச்செய்து விட்டீர்கள்.....407 குழந்தைகள் இன்று மகிழ்வுடன் அணிந்து வருவதைக்காண கண் கோடி வேண்டும்......சிறப்பு ஆடை என்றவுடன் மறுப்பேதும் சொல்லாமல் ஒவ்வொருவரும் 5, 10, 100, என்ற எண்ணிக்கையில் பெற்றுத்தந்தமைக்கு இருகரம் கூப்பி என் நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்....என்றும் என் பள்ளியின் வளர்ச்சியிலும் குழந்தைகளின் மகிழ்விலும் உங்களின் பங்கு உண்டு...என்னது முக நூலா?நண்பர்களாக? என்று வியப்புடன் கேட்கும் போது உங்களிடம் எத்தனை அன்பினை பெற்று உள்ளேன் என்பது அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது... மலைகளைப் பெயர்க்கும் நம்பிக்கை ஒன்று இருக்குமானால் அது சுய சக்தியில் கொள்ளும் நம்பிக்கை தான்- என்பதற்கேற்ப தன்னம்பிக்கையில் நான் என்றும் தோற்றது இல்லை...
விதியின் இலக்குக்குப் பலியாவதற்குப் பதிலாக விதியை மாற்றி அமைத்து நாம் அதனை நிர்ணயிக்கவும் முடியும்.என்பதை என் வாழ்க்கையில் கடைபிடித்து வருகிறேன்.. தியேட்டர் சென்று திரைப்படம் பார்ப்பது... தொல்லைத்தரும் தொலைக்காட்சி பார்ப்பது இல்லை...இனம் மொழி மதம் எல்லாம் கடந்து முகநூல்.....மட்டுமே.. கேட்கத்தயங்கிய நிமிடங்கள்.... கேட்டவுடன் திரும்பி வந்த பதில்கள்...யாரும் இல்லை என்ற வார்த்தை சொல்லவில்லை..அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் இடைமலைப்பட்டிபுதூர் மக்களின் சார்பிலும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் குழந்தைகளின் சார்பில் நன்றி..நன்றி..நன்றி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைமலைப்பட்டிபுதூர் பள்ளி ஆசிரியர் திருமதி லதா பாலாஜி
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews