👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பழைய பாடத்திட்டத்தில் தேர்வில் தோல்வியுற்ற 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் அதே ( பழைய) பாடத்திட்டத்திலேயே தேர்வு எழுதலாம்.
2020ஆம் ஆண்டு மார்ச் 2 முதல் 24 வரை 12ஆம் வகுப்புக்கும், மார்ச் 4 முதல் 26 வரை 11ஆம் வகுப்புக்கும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு என தேர்வுத்துறை அறிவிப்பு.


பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் மீண்டும் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாத மாணவர்களின் நலன் கருதி, மார்ச் 2020, ஜூன் 2020 மாதங்களில் நடக்க உள்ள ேதர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, கடந்த தேர்வுகளில் பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி தோல்வி அடைந்த மாணவர்கள் மார்ச், ஏப்ரல் 2020 மாதத்தில் நடக்க உள்ள பிளஸ் 1, பிளஸ்2 (600 மதிப்பெண்) மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதலாம். இதற்கான தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் பிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி முடிவடையும். பிளஸ் 1 தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி முடிவடையும். பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடையும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.