👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விவசாயத்திற்கு, விரைவு திட்டத்தின் கீழ், மின் இணைப்பு பெற விரும்புவோர், இன்று முதல், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் பதிவு செய்யலாம்.
தமிழக மின் வாரியம், விவசாயத்திற்கு, இலவசமாக மின் வினியோகம் செய்கிறது. இதற்காக, வாரியத்திற்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. விவசாயத்திற்கு, சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ், மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, சாதாரண பிரிவில், மின்சாரம், மின் வழித்தட செலவுகள் இலவசம்.சுயநிதி பிரிவில், மின் வழித்தட செலவில் குறிப்பிட்ட தொகையை, விவசாயிகள் ஏற்க வேண்டும். இந்த பிரிவில், விரைவாக இணைப்பு வழங்க, 'தத்கல்' என்ற திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் கீழ், மின் வழித்தடத்திற்கான மொத்த செலவுகளையும், விவசாயிகளே ஏற்க வேண்டும்.நடப்பாண்டில், 10 ஆயிரம் விரைவு இணைப்பு வழங்க இருப்பதாக, மின்துறை அமைச்சர் தங்கமணி, ஜூலையில், சட்டசபையில் அறிவித்தார். அதை, மின் வாரியம், இன்று முதல் செயல்படுத்த உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, சாதாரணம் அல்லது சுயநிதி பிரிவில், விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகள் மட்டுமே, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். அத்திட்டத்தில், மின் இணைப்பு வழங்கும் பணி, அக்., 1ல் இருந்து துவங்குகிறது. விவசாய மின் இணைப்பு கேட்டு பதிவு செய்துள்ளவர்கள், சம்பந்தப்பட்ட செயற்பொறியாளர் அலுவலகங்களுக்கு சென்று, தத்கல் திட்டத்தில் இணைய விருப்பம் தெரிவித்து, படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும்; அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும். பின், மின் இணைப்பு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.