Search This Blog
Tuesday, October 01, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜி.எஸ்.டி இழப்பீடு, அனைவருக்கும் கல்வி திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான மானிய நிதியுதவி ₹7,825.59 கோடி பாக்கி உள்ளது. அந்த நிதியை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மனு அளித்துள்ளார்.இது குறித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை கொண்ட மாநிலமாகும். தமிழகத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக இறங்கி, சில இடங்களில் ஆயிரம் அடிக்கு கீழ் சென்றால் கூட தண்ணீர் கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், தீபகற்ப நதிகளை இணைப்பதன் மூலம் தமிழகத்திற்கு விரைவாக ஒரு மாற்று ஏற்பாட்டை செய்ய முடியும். அதன்படி, காவிரி படுகைக்கு கோதாவரியில் இருந்து தண்ணீர் மாற்றி விடுவதே தமிழகத்தின் நீர் பற்றாக்குறையை போக்குவதற்கான ஒரே தீர்வாக அமையும். அத்துடன், கோதாவரியுடன், மகாநதியை இணைத்தால் நீரின் அளவு உயரும். கோதாவரி ஆற்றில் இருந்து நீர் பெறும் மாநிலங்களுடன் பேசி அங்கிருந்து காவிரிக்கு 200 டி.எம்.சி. தண்ணீரை கட்டளை இணைப்பு வழியாக தமிழகத்திற்கு அனுப்பும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதை இறுதி செய்வதற்கு மத்திய நீர் ஆதாரத்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.
நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது காவிரி நீர் மற்றும் அதன் உபநதிகளை சீரமைக்க உதவும் திட்டமாக உள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தமிழக அரசு தயாரித்துள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்கு 9,927 கோடி செலவிட வேண்டியுள்ளது. எனவே இந்த தொகையை அளித்து இந்த திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்.தமிழகத்தில் உள்ள முக்கிய அணைகளை சீரமைப்பதற்கான திட்டத்திற்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மத்திய, மாநில அரசுகளின் சம அளவு நிதி பங்களிப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்ட பணிகள் முழு அளவில் முடிவடைந்து மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. முதல் கட்டப்பணிக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு இருந்த 14 ஆயிரத்து 600 கோடி பின்னர் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் திருத்தி அமைக்கப்பட்டு, 19 ஆயிரத்து 58 கோடியாக உயர்ந்துள்ளது. அத்துடன், மெட்ரோவின் 2ம் கட்ட பணிகளுக்கு ஒப்புதல் கேட்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளது. 118.9 கிலோ மீட்டர் நீளம் மேற்கொள்ளப்பட வேண்டிய இந்த திட்டத்திற்கான செலவாக 69 ஆயிரத்து 180 கோடி என மதிப்பீடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி அதை மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி மாதம் அனுப்பி வைத்திருந்தது. இந்த திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை மற்றும் உலக வங்கி ஆகியவை கடன் தர உள்ளனர். எனவே மெட்ரோ ரயில் முதல் கட்ட பணியில் திருத்தப்பட்ட நிதி மற்றும் 2ம் கட்ட பணிகளுக்கான நிதியுதவியை சம பங்களிப்பு என்ற அளவில் வழங்கிட வேண்டும், தமிழகத்தில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் திட்டத்தின் அடிப்படையில் புதிய மருத்துவ கல்லூரிகளை அமைக்க அனுமதி வழங்க வேண்டும். இந்த கல்லூரிகளை அமைப்பதற்கு இடையூறாக உள்ள சில நிபந்தனைகளை தளர்த்தி அவற்றை அமைப்பதற்கு அனுமதி வழங்கி, உத்தரவிட வேண்டும்.
சேலம்-சென்னை இடையே மாலை நேரங்களில் விமான சேவை அளிக்க மத்திய விமான போக்குவரத்துத்துறைக்கு உத்தரவிட வேண்டும். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பலர் அடிக்கடி துபாய்க்கு சென்று வருகின்றனர். எனவே கோவையில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவையை அளிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்திற்கு மத்திய அரசு பல்வேறு பெரிய திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. ஆனால், ஜி.எஸ்.டி இழப்பீடு, அனைவருக்கும் கல்வி திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்கான மானிய நிதியுதவி 7,825.59 கோடி மானியம் பாக்கி உள்ளது. அந்த நிதியை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
SSA
அனைவருக்கும் கல்வி திட்டங்களுக்கான மானிய நிதியுதவி 7,825.59 கோடி பாக்கியை வழங்க அரசு துறைகளுக்கு உத்தரவிட மனு
அனைவருக்கும் கல்வி திட்டங்களுக்கான மானிய நிதியுதவி 7,825.59 கோடி பாக்கியை வழங்க அரசு துறைகளுக்கு உத்தரவிட மனு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.