Breaking

Tuesday, October 08, 2019

திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராஜ்ய புரஸ்காா் மாநில விருது பெற்ற திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவி டி.பிரித்திகாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா். பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது. 2018-ஆம் ஆண்டுக்கான விருது திருப்பத்தூா் கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருவலம் அரசினா் மகளிா் மேனிலைப் பள்ளி சாரணீய வழிகாட்டி மாணவி டி. பிரித்திகா என்ற மாணவிக்கு தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் சென்னை ஆளுனா் மாளிகையில் கடந்த மாதம் 26 ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில் வழங்கி வாழ்த்தினாா். இந்த விருதைப் பெற்ற மாணவி டி.பிரித்திகாவுக்கு, பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியா் சிவகுமாா், பள்ளியின் சாரணீய வழிகாட்டி பொறுப்பு ஆசிரியை எஸ்.மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்தனா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog