Breaking

Tuesday, October 29, 2019

உயிர் பலி ஏற்பட்டால்தான் ஒவ்வொரு விஷயத்திலும் அரசு நடவடிக்கை எடுக்குமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயிர் பலி ஏற்பட்டால்தான் ஒவ்வொரு விஷயத்திலும் அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று சுஜித் மரணத்திற்கு இழப்பீடு கோரிய வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக்கோரியும் சுஜித் மரணத்திற்கு இழப்பீடு கோரியும் பொன்ராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ஆழ்துளை கிணறு அமைக்க வழங்கப்பட்ட அனுமதிகள் குறித்த ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? இதுவரை எத்தனை ஆழ்துளை கிணறுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது..? என்று அடுக்கடுக்காக கேள்விகளை நீதிபதிகள் தொடுத்தனர். இதையடுத்து மூடப்படாமல் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த நீதிபதிகள், நவம்பர் 21 ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog