👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்தான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகி வருகிறது. சுமார் 350 அடி ஆழம் வரை குழந்தைகள் விழுந்ததற்கான தரவுகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டு ஆரோக்கியமாக இருப்பதற்கான எண்ணிக்கைத் தரவுகள் நம்மிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பது துரதிர்ஷ்டவசமானது.
இது போன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு முகநூலில் தகவல் அளித்துள்ளார்
ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்க உதவும், நவீன கருவியை உருவாக்கினால் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.5 லட்சம் பரிசு கொடுக்கலாம் என்ற பரிந்துரையை முதல்வரின் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாக தமிழக தகவல் தொழில்நுட்ப துறை முதன்மை செயலாளர் சந்தோஷ் பாபு முகநூலில் தகவல் அளித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.